பயிர் பாதுகாப்பு :: பயிரைத் தாக்கும் நூற்புழுக்கள்

நூற்புழுவினால் தாக்கப்பட்ட செடியைப் பார்க்கின்ற தென்படுகின்ற அறிகுறிகளாவன:

  • உயரத்திலும் பருமனிலும் குறைந்த செடியின் வளர்ச்சி.
  • செடியில் குறைந்த பக்க கிளைகளின் எண்ணிக்கை.
  • இடைக்கணுவின் நீளம் குறைவுபடுதல்
  • இலைகள் பச்சையம் இழந்து பழுப்பு நிறமாக மாறுதல்
  • இலை ஓரங்கள் சிவப்பாகி மேற்புறமாக மடிதல்.
  • செடிக்கு மேலே கிளைகளெல்லாம் ஒன்று கூடி “காலிபிளவர்” போன்ற அமைப்பு உருவாதல்
  • இலை நுனி வெண்மை நிறமாகி கீழ் நோக்கித் தொங்குதல்.
  • உரு சிதைந்த மொக்குகள் அல்லது பூக்கள்.

மேற்கூறிய பாதிப்புகளை செடியைப் பார்த்து அறிந்த போதிலும் செடியின் வேரையும் சோதித்துப் பார்க்க வேண்டியது அவசியம். அவற்றில் தென்படும் அறிகுறிகளாவன :

  • சல்லி வேர்களற்ற கட்டை வேர்கள்
    உதாரணம் : எலுமிச்சை அல்லது நாரத்தை நூற்புழுவினால் தாக்கப்பட்ட கமலா ஆரஞ்சு  மரத்தின் வேர்கள்.
  • பாசி மணி போன்ற வேர் முடிச்சுகள்
    உதாரணம்: வேர் முடிச்சு நூற்புழுவினால் தாக்கப்பட்ட கேரட், மிளகு, இஞ்சி வேர்கள்.
  • இளம் சிவப்பு அல்லது கருமையான கீறியது போல உள்ள காயங்கள் அல்லது தழும்புகள். கருகல் நூற்புழுவால் தாக்கப்பட்ட பீன்ஸ் மற்றும் பட்டாணி வேர்கள்.
  • வேரின் முனைகள் வளர்ச்சி தடைப்பட்டு உப்பிய தோற்றம் அவற்றின் மேல்புறம் பக்க வேர்கள் உருவாதல். அவையே நாளடைவில் ஹாக்கி ஸ்டிக் போல் வளைந்து காணப்படுதல். இதற்கு உதாரணம் புற வேர் நூற்புழுக்களினால் தாக்கப்பட்ட வெள்ளைப் பூண்டின் வேர்கள்.
  • வேரில் மணி போல் வெண்மை நிறமாகவோ மஞ்சள் நிறமாகவோ பெண் நூற்புழுக்கள் ஒட்டியிருத்தல்.
    உதாரணம் : முட்டைக் கூட்டு நூற்புழுவினால் தாக்கப்பட்ட உருளைக்கிழங்கு வேர்கள்
  • வேர்  நூற்புழுவின் தாக்குதலுக்குப் பிறகு, பூசணங்களின் தாக்குதலினால் வேர்கள் அழுகி விடுகின்ற நிலை.
    உதாரணம்: நூற்புழுவினால் தாக்கப்பட்ட கருகல் பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு போன்றவற்றின் வேர்கள்.
முதல் பக்கத்திற்குச் செல்ல...

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016