பயிர் பாதுகாப்பு :: எண்ணெய்ப்பனை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

எலி: டட்டிரா இன்டிகா
சேதத்தின் அறிகுறிகள்:

  • எலிகள் பனைமரத்தை குடைந்து எலி வலையை உருவாக்கும்
  • பனையின் மத்திய பகுதியில் உள்ள இனிப்பான பகுதியை உண்டு சேதப்படுத்தும்
  • எலியின் தாக்குதல் வெளியில் தெரியாது ஆனால் இலைகள் திடீரென்று வாடி காய்ந்துவிடும். சில நேரங்களில் பனைமரம் இறந்துவிடும்

எலியை கட்டுப்படுத்தும் முறைகள்:

  • பழத்தோட்டத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்
  • எலிகளின் தாக்கம் உள்ள பகுதியை 22 காஜ் கால்வனைஸ்டு இரும்பு வலையை பனைமரத்தின் அடிப்பகுதியில் சுற்றவேண்டும்
  • எலிபொறிகள் வைத்து கவர்ந்து அழிக்கலாம்
  • நச்சு உணவுகளாக ஜிங்ஃபாஸ்பைடு அல்லது ஃப்ரோமோடைலான் (அ) வார்பரின் அல்லது பியூமரின்
  • இரை விழுங்கிகளான பாம்பு, கழுகு, ஆந்தை, கீரி, பூனை மற்றும் நாய்களை பழத்தோட்டத்தில் இயற்கையாக கட்டுப்படுத்துகிறது

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015