பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: வெங்காயம்
நீலப்பூசணம் அழுகல்: பெனிசீலியம் வகை
தாக்குதலின் அறிகுறிகள்:
  • ஆரம்பகட்ட அறிகுறிகள்- செதிள்களில் நீர் நனைத்த பகுதிகள் மேற்பரப்பில் தோன்றும்
  • பின்னர், மேற்பரப்பில் உள்ள புண்களில் பச்சை  அல்லது நீலம்-பச்சை பூசணம்  தோன்றும்
  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சதைப்பிடிப்பான செதிள்களில் பழுப்பு அல்லது  சாம்பல்  நிறத்தில் இருக்கும்
  • முற்றிய நிலையில் பாதிக்கப்பட்ட குமிழ்களில் நீர்த்தன்மையான அழுகல் தோன்றும்
 
  நீர் நனைத்த பகுதிகள் பச்சை அல்லது நீலம்-பச்சை பூசணம் சாம்பல்  நிற உயிர் நுண்மங்கள்
நோய் காரணி:
  • பெனிசீலியம் டிஜிடேடம், பெனிசீலியம் அக்சாளிகம், பெனிசீலியம் எக்ச்பென்சம் , பெனிசீலியம் லுடியம்
  • விளக்குமாறு போன்ற கொநிடியோபோர்களில் இருந்து மகத்தான உயிர் நுண்மங்கள்  உற்பத்தி ஆகிறது.
  • செடி கொடி கழிவுகள்  மற்றும் முதுமை அடைகிற தாவர திசுகளில் உயிர் வாழும்
  • காயங்கள் அல்லது சீர்மை செய்யாத  கழுத்து திசு மூலம் பரவவும் 
  • வெப்பநிலை-  21° to 25°C மற்றும் அதிகமான ஈரப்பதம்
கட்டுப்படுத்தும் முறை:
  • குமிழ்களில் காயங்கள் மற்றும்  பூச்சி சேதத்தை தவிர்க்கவும்
  • அறுவடையின் பொது வெங்காய குமிழ்களை காயங்கள் அலது சேதம் ஏற்படாமல் கையாளவேண்டும்
  • வேகமான மற்றும் முழுமையான சீர்மையாக்குதல்
  • குமிழ்களை 41°F (5°C) வெப்பநிலையில் அல்லது குறைந்த ஈரப்பதத்தில் சேமிக்கவும்.
Source of Images:
http://www.ipm.ucdavis.edu/PMG/P/D-OG-PESP-BU.001.html
http://www.seminis.com/SiteCollectionDocuments/Onion-Disease-Guide.pdf

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015