பயிர் பாதுகாப்பு :: வெங்காயம் பயிரைத் தாக்கும் நோய்கள்
வெள்ளை அழுகல் நோய் : ஸ்கிளிரோசியம் செபிவோரம்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • இலைகள் மஞ்சளாதல் மற்றும் நுனிக் கருகுதல். செடிகளை பிடுங்கிப் பார்க்கும் பொழுது வேர்கள் அழுகிக் காணப்படும். வெங்காயக் குமிழின் அடிப்புறம் வெள்ளை (அ) சாம்பல் நிற பூஞ்சண வளர்ச்சியுடன் காணப்படும்்
  • தாக்குதல் அதிகமாகும்போது, சிறிய கருப்பு நிற கோவை வடிவ ஸ்கிளிரோசியா உருவாகும். வெங்காயக் குமிழ்கள் முழுவதும் அழுகிவிடும்
     
  வெங்காயத்தில் வெள்ளை அழுகல்   ஆரம்ப சேதம்   அழுகிய வெங்காயம்

கட்டுப்படுத்தும் முறை:

  • பயிர் சுழற்சி முறை
  • சுத்தமான விதைகளைப் பயன்படுத்துதல்
  • அங்கக உரங்களுகடன் சேர்த்து உரமிடவேண்டும்
  • பெனோமில், கார்பண்டசிம் (அ) கையோபேனேட் மீத்தைல் (100 - 150 கி/கிலோ விதை) சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

Source:

Images: https://www.rhs.org.uk/advice/profile?pid=226,
Plate: Mariaterasa, R., Francesa. S, Santo. P, Demetrio. S, Angela, R and E.A.Giovanni.2013. Essential oil chemical composition and antifungal effects of Sclerotium cepivorum of Thymus capitatus wild popilations from Calabria, Southern Italy. Rev. bras. farmacogn.,23 (2 ), pp-239-248.

நோயினைகண்டறிதல்:
ஸ்கிளிரோசியம் செபிவோரம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015