பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் நோய்கள்
இலையுறை அழுகல் நோய்: சரோக்லேடியம் ஒரைசே

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலையுறை நிறமாற்றம் ஏற்படுதல். இளம் கதிரை சுற்றியிருக்கும் இலையுறையில் அழுகல் ஏற்படும்.
  • அடர் சிவப்பு கலந்த பழுப்பு நிற ஓரங்களுடனும் சாம்பல் நிற மையத்துடனும் கூடிய ஒழுங்கற்ற புள்ளிகள் காணப்படும்
  • புள்ளிகள் பெரிதாகி சிலசமயம் ஒன்றிணைந்து முழு இலையுறையையும் மூடிக் கொள்ளும்.
  • தீவிர தாக்குதலின் போது முழு கதிர் அல்லது அதன் சில பகுதிகள் வெளிவராமல் தடுத்து இலையுறைக்குள்ளேயே இருக்கச் செய்துவிடும்.
  • வெளிவராத கதிர் அழுகி பின் சிவப்பு நிறத்திலிருந்து பழுப்பு நிறமாகவும் பின் கரும்பழுப்பாகவும் மாற்றம் அடைதல்.
  • தாக்கப்பட்ட கதிர் உறை மற்றும் இளம் கதிர்களின் உள்ளே வெள்ளைபொடி போன்ற வளர்ச்சி காணப்படுதல்.
  • நோய் தாக்கப்பட்ட கதிர்கள் மற்றும் தானியங்கள் மலட்டுத் தன்மையாகவும், சுருங்கியும், பகுதி நிரப்பியும் அல்லது முழுவதுமாக தானியம் நிரப்பப்படாமலும், நிறமாற்றம் ஏற்பட்டும் காணப்படும்.
  • கதிர் வைக்கும் பருவம் முதல் நெற்பயிர் முதிர்ச்சி நிலை முடிய நோய் தாக்கம் அதிகமாகக் காணப்படும்.
  • நோய்க்கு ஏற்ற நிலைகள்:   அதிக அளவிலான தழைச்சத்து, அதிக ஈரப்பதம், அடர்த்தியான பயிர் வளர்ச்சி, கதிர் உறை அழுகல் நோய் பரவுவதை மேம்படுத்துகின்றது. 20-28 செ வெப்பநிலை பூசண வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளது.
இலையுறை நிறமாற்றம் இலையுறை அழுகல் பாதிக்கப்பட்ட தாவரம்

இலையுறை அழுகல்

நோய்க் காரணி:

  • வெள்ளைப் பூசண இழையை உருவாக்குகிறது. அடர்த்தியற்ற கிளைகளைக் கொண்டது.
  • பூசண இழையிலிருந்து உருவாகும் (கொனிடியோபோர்ஸ்) பூசண இழைச் செதில்கள் தழைப் பூசண இலைகளைவிட சற்று தடிப்பானதாக இருக்கும். ஒன்று அல்லது இரண்டு முறை கிளைகள் உருவாகும். ஒவ்வொரு முறையும் 3-4 கிளைகள் வட்டமைப்பில் இருக்கும்.
  • இறுதி கிளைகள் கொனிடியாவை உருவாக்குகிறது. அவை நீள் உருளை வடித்திலிருந்து சற்று கதிர் வடிவமாகவும் சில சமயம் வளைந்து, நிறமில்லாமல், மென்மையாகவும் ஒரு உயிரணு கொண்டு 4-9 x 1-2.5 மீ அளவுடனும் காணப்படும்.
  • சில சமயத்தில், பூசணம் நுண்ணுயிர் நோய்க் காரணிகளுடன் இணைந்து கதிருறையைத் தாக்குகிறது. கதிர் உறை தாக்குதல் ஏற்பட்டு நெல் தானியத்தில் நிறமாற்றம் ஏற்படுகிறது.
  • இலைத் துளைகளின் வழியாக பூசணம் ஊடுருவி காயங்களை ஏற்படுத்துகிறது. காற்றுக்குழாய்த்திசு மற்றும் இலை இடைத்திசுக்களில் உயிரணுக்களுக்கிடையிலே வளர்ச்சி ஏற்படுகிறது.
  • தாக்கப்பட்ட பயிர்த் தூர்கள் மற்றும் விதைகளின் மேல் கதிர் உறை அழுகல் பூசணம், பூசண இலையாக நிலைத்திருக்கிறது.

கட்டுப்பாடு:

  • பயிர் அறுவடைக்குப்பின் நோய் தாக்கப்பட்ட பயிர்த் துார்களை அகற்ற வேண்டும்.
  • உகந்த பயிர் இடைவெளி விடவேண்டும்.
  • துார்விடும் பருவத்தில் சாம்பல் சத்து அளிக்கவேண்டும்.
  • களைகளைக் கட்டுப்படுத்தி வயலைத் துாய்மையாக வைக்க வேண்டும்.
  • சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் நுண்ணுயிரிடுவதல் மூலம் கதிரழுகல் தீவிரத்தை 20-42 சதவிகிதம் வரை குறைக்கிறது. பயிர் வளர்ச்சியைத் துாண்டி தானிய மகசூலை அதிகரிக்கிறது.
  • 25 சதுர மீட்டர் பரப்பு உள்ள நாற்றங்காலில் 2.5 செ.மீ ஆழம் வரை நீர் தேக்கி வைக்க வேண்டும். இந்த தேங்கிய நீரில் 2.5 கிலோ சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ்பொடியைத் தூவி நன்கு கலக்க வேண்டும். நாற்றுக்களின் வேர்களை, இதில் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.
  • திரவ சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் @ 10 மி.லி./கிலோ விதையுடன் விதை நேர்த்தி செய்யவும் அல்லது ஒரு எக்டருக்கு தேவையான 5௦௦ மி.லி. திரவ சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் கொண்டு நாற்றுகளின் வேரை நனைத்து நடவும்.
  • நடவு செய்து 30 நாட்களுக்குப்பிறகு “சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ்” @ 2.5 கிலோ/எக்டர், மண்வழி மூலம் 50 கிலோ தொழு உரம்/ மணலுடன் கலந்து அளிக்க வேண்டும்
  • சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் 0.2% செறிவுடன் நடவு செய்து 45 நாட்களிலிருந்து 10 நாட்கள் இடைவெளியில் அளித்தல் வேண்டும்.
  • த.மி.வே.பல்கலைக்கழகத்தின் பி.ஃப்-1 கலவையை 5௦௦ மி.லி./ எக்டர் என்ற அளவில் தெளிக்கவும்.   
  • கதிர் வெளிவருதலின் போது பூசணக்கொல்லிகளை தெளித்தல் வேண்டும்.
  • ஜிப்சம் 500 கிராம்/எக்டர், இரு சமஅளவில் – ஆரம்பத்தில் மற்றும் தூர் நிலையிலும் இடவும்.
  • வேப்பெண்ணெய் 3 % அல்லது இபோமொய்யா இலை போடி சாறு (25 கிலோ/எக்டர்) அல்லது புரோசொபிஸ் இலை போடி சாறு (25 கிலோ/எக்டர்). முதல் தெளிப்பு இலை குருத்து வெளியாகும் போது மற்றும் 15 நாட்களுக்குப்பின் இரண்டாம் தெளிப்பு தெளிக்கவும்.
  • மேன்கோசெப் மற்றும் பெனோமைல் போன்ற பூசணக் கொல்லிகளுடன் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
  • ஹக்சகொனோஜோல் 75 % WG 100 மில்லிகிராம்/லிட்டரை நோய் தாக்குதலின் ஆரம்பத்திலும், 2-ம் தெளிப்பு 15 நாட்களுக்குப்பின் தெளிக்கவும் அல்லது
  • ட்ரைடென்மார்ஃப் மற்றும் பாஸ்பமிடான் இரண்டையும் கலந்து அளிக்கவேண்டும்.
  • கதிர் இலைப்பருவத்தில் கார்பன்டசீம், எடிபென்ஃபாஸ் அல்லது மேன்கோசெப் அல்லது குலோரோதலோனில் அல்லது மெட்டோமினோஸ்ட்ரோபின் 500 மி.லி./எக்டர் தெளிக்கவேண்டும்
  • கார்பன்டசீம் 250 கிராம் (அல்லது) குளோரோதலோனில் 1 கிலோ் ஆகிய ஏதோ ஒன்றை தெளிக்கவேண்டும்.
  • பெனோமைல் மற்றும் காப்பர் ஆக்ஸிக்லோரைடேன் இலைவழித் தெளிப்பு மேற்கொள்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016