பயிர் பாதுகாப்பு :: பீச் பயிரைத் தாக்கும் நோய்கள்

பீச் இலை சுருண்டல் நோய்: டாப்ரீனா

அறிகுறிகள்:

  • இந்நோய் பாதிப்பால், இலைகள் சுருண்டும், கொப்புளம் போன்று காணப்படும்
  • நோயின் ஆறம்பத்தில் இலைகள் மஞ்சளாகவோ, அல்லது சிவப்பாகவோ நிறம் மாறுபட்டு, இலை ஆரம்ப நிலையிலேயே உதிர்ந்துவிடும்
  • பாதிக்கப்பட்ட பகுதி இளஞ்சிவப்பாகவோ அல்லது சிவப்பாகவோ காய்ந்திருக்கும்
  • மரத்தின் நோய் பாதிப்பால் சாகுபடி குறைந்துவிடும்

கட்டுப்பாடு:

  • நோய் தாக்கப்பட்ட தண்டுகளை அகற்றி விட வேண்டும்
  • செடிகளில் போர்டியாக்ஸ் கலவை 1% அல்லது கார்பென்டாஸின் 0.1% தெளிக்கவும்
  • அறுவடை முன்பு 20 நாட்களுக்கு மேன்கோசெப் 0.25% அளவில் தெளிக்கவும்




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015