பயிர் பாதுகாப்பு :: பேரிபழம் பயிரைத் தாக்கும் நோய்கள்

இலை அழுகல் மற்றும் பழப்புள்ளி நோய்

அறிகுறிகள்:

  • முதலில் இலைப்புள்ளி நோய் சிறிதாக ஊதா நிறத்தில் தோன்றி பின்பு நாளடைவில் பெரிதாகிவிடும். முதிர்ந்த ஊதாப் புள்ளிகள், வளர்ந்து ஓரங்களில் ஊதா நிறத்திலும் நடுப்பகுதி பழுப்பு நிறத்தில் தோன்றும்.
  • நோய் தாக்கப்பட்ட பழப்புள்ளிகள் நான்கில் உரு பங்கு அளவில், கருமையாகவும், குழைந்துக் காணப்படும். சில சமயங்களில், பழத்தின் மேற்பரப்பு ஒருங்கிணைத்து காணப்படும்
  • குளிர்காலங்களில், குச்சிகளிலும், இலைகளிலும் மேற்பரப்பில் புள்ளிகள் காணப்படும். இளவேனிற் காலங்களில், குச்சிகளில் ஏற்பட்டுள்ள புள்ளிகளில் வித்துகள் மழைநீரினால் இலைகளிலும் பரவச் செய்கின்றன.
  • நோய் தாக்கப்பட்டதின் அறிகுறிகள் ஒரு வாரத்திற்கு முன்பே அறிந்து கொள்ளலாம். வசந்த காலங்களிலும் மற்றும் கோடைக் காலங்களின் 750 பே வெப்ப நிலையில் நோயின் இரண்டாம் நிலை தாக்கக்கூடும் மற்றும் இலையின் மேற்பரப்பில் ஈரப்பதமாக இருக்கும்

கட்டுப்பாடு:

  • இலையின் முழு வளர்ச்சியின் போது, இரண்டு வாரங்களுக்கு நான்கு முறை அளவில் பூஞ்சான் கொல்லியை தெளிக்க வேண்டும்.




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015