பயிர் பாதுகாப்பு :: பேரிபழம் பயிரைத் தாக்கும் நோய்கள்

கரு அழுகல் நோய்:

அறிகுறிகள்:

  • கரு அழுகல் நோய், மிக அழுத்தமான அழுகல் போன்று காணப்படும். புள்ளிகள் முதல் நிலையில் பழுப்பு நிறத்தில் காணலாம். பின்பு வளர்ந்து கருமை நிறத்தில் காணப்படும்.
  • பழங்களில் ஏற்பட்ட புள்ளியின் நடுப்புறத்தில் பூஞ்சான் வித்துத் தூள்கள் பரவியிருக்கும். பாதித்த இலைகளில், சிறிய ஊதா நிறத்தில் குழிப் போன்று காணப்படும்.
  • நோய் முதிர்ந்த நிலையில், புள்ளிகள் ஊதா நிறத்திலும் நடுப்புறத்தில் பழுப்பு நிறத்திலும் காணலாம். பழுப்பு கலந்த சிவப்பு பகுதிகள், அழுகி சிறிய கிளைகள் போன்று காணப்படும்
  • குளிர்காலங்களில் வெடித்து, பழங்கள் அழுகி, மற்றும் மரக்கட்டைகள் அழிந்துவிடும். வசந்த காலங்களில் வெடித்தப் பகுதியில் பூசண வித்துகள் காணப்படும்.
  • முதலில் இலையின் திசுக்களை நோய் பரவச் செய்யும். மழைக்காலங்களில், 800 பே என்ற வெப்பநிலை நோய் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும். பொதுவாக பூக்களை நோய் பாதித்தப் பின்பு இறுதியில் பழத்தில் உள்ள நோய் அதிகரித்துவிடும்.

கட்டுப்பாடு:

  • நோயைக் கட்டுப்படுத்த சுகாதாரம் மிக முக்கியமானவை. அழுகிய குச்சிகள், கொம்பு மற்றும் அழுகிய பழம் போன்றவைகளை அகற்றி விட வேண்டும்.
  • வசந்தக் காலங்களில் நோய் பரவுவதற்கு முன்பே பழங்களுக்கு பூஞ்சான் கொல்லியைத் தெளிக்க வேண்டும்.

 

 

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015