பயிர் பாதுகாப்பு :: மிளகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

வெள்ளை வால் மாவுப்பூச்சி: பொரீச்யா விர்கேட்டா
சேதத்தின் அறிகுறிகள்:

  • நுனித் தண்டு, இலைகள் மற்றும் காய்கள் பகுதியில் மாவுக் கூட்டமாக இருந்து சாற்றை உறிஞ்சும்.
  • செடிகள் மஞ்சளாக மாறி பிறகு காய்ந்துவிடும்.
  • காய்கள் உதிர்ந்துவிடும்.

பூச்சியின் விபரம்:

  • தாய்ப்பூச்சி இறகற்றது மேலும் வயிற்றுப் பகுதியின் கடைசியில் வெண்ணிற மெழுகு போன்ற இழை இருக்கும்.
  • உடல் முழுவதும் மெழுகுப் போன்ற மாவுப் பூச்சி இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • தாக்கப்பட்ட பகுதிகளை களைந்து எடுத்து அழிக்கவும்.
  • டைமீதோயேட் 2 மிலி / லிட்டர் தெளிக்கவும்.

 

வெள்ளை வால் மாவுப்பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015