பயிர் பாதுகாப்பு :: அண்ணாசிபழம் பயிரைத் தாக்கும் நோய்கள்
தியிலவியோப்சிஸ்: திலவியோப்சிஸ் பேரடோக்சா

அறிகுறிகள்:

  • அறிகுறிகள் முதலில் தண்டுகளில் தோன்றும் பின் அது சதைப் பகுதிகளில் பரவும். தோலின் மேல் நீர் கோத்தது போல் தோன்றி அழுகிப் போன சதைப்பகுதிகள் முழுவதும் கருப்பாக மாறிவிடும்
  • சதைப்பகுதி மென்மையாக மாறினால், குறைவான அழுத்தத்தினால் தோல் வெடித்து காணப்படும்

கட்டுப்பாடு:

  • பாதிக்கப்பட்ட பயிர்களிலிருந்த கன்றுகளை எடுப்பதை தவிர்க்கவும்
  • ஆழமாக பயிரிடுவதையும், உயரமான படுக்கையில் பயிரிடுவதையும் தவிர்க்கவும்.
  • வடிகால்களை அதிகப்படுத்தவும்
  • 1%போர்டியாக்ஸ் கலவை அல்லது 0.25% காப்பர் ஆக்சில் க்ளோரைடுடன் பயிரிடுவதற்கு முன்பே கன்றுகளை அந்தக் கலவையில் முக்க எடுக்க வேண்டும். மண்ணையும் முழுவதுமாக நனைக்க வேண்டும்


 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015