பயிர் பாதுகாப்பு :: பிளம்ஸ் பயிரைத் தாக்கும் நோய்கள்

பழுப்பு அழுகல்: மொனிலினியா ப்ரக்டிகோலா

அறிகுறிகள்:

  • பழுப்பு அழுகல் பூசணங்களினால் பூ பூர்க்கும் பொழுது கருகியும், பழங்கள் அழுகியும் காணப்படும். மண்ணின் ஈரப்பதமும்,  இயல்பான வெது வெதுப்பான வெப்பநிலையும் இந்நோய் பரவுவதற்கு உகந்ததாகும்.
  • காற்று, பனிக்கட்டி மழை, பூச்சிகள் பழங்களை சேதப்படுத்திவிடும். தாக்கப்பட்ட பூக்கள் பழுப்பு நிறமாகவும், நீர் கோத்தது  போன்றும் தோன்றும்.
  • பூசணங்கள் பூக்காம்புகளில் வளர்ந்து தண்டு வரை பரவி பின் கொம்புகள் பின்னோக்கிக் காய்ந்துவிடும்.
  • நோய் தாக்கப்பட்ட பூங்கொத்துகள் மற்றும் பழங்கள் பொதுவாக திடமான பூங்கொத்துகளை மூடி பழுப்புப் பூசணமாக உருவாகும். முதிரும் பருவத்தில் பழங்களை நோய் தாக்கப்படும்.
  • பூசண உயிரிகள் குளிர்காலத்தில் காயச்செய்து, தண்டில் சொறி போன்றும், முதிர்ந்த  பழங்களின் பூங்கொத்து தண்டுகளையும் தாக்கும்.

கட்டுப்பாடு:

  • மீண்டும் மீண்டும் பூசணக்கொல்லியை தெளிப்பதும், தூய்மையாக வைத்திருப்பதும் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த உதவும்.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015