பயிர் பாதுகாப்பு :: பிளம்ஸ் பயிரைத் தாக்கும் நோய்கள்

பிளமில் நுண்ணுயிரி புள்ளிகள்: சேந்தாமோனஸ் கேம்பஸ்ட்ரிஸ் பி.வி. ப்ருனி

அறிகுறிகள்:

  • அறிகுறிகள் முதலில் சிறியதாக, வடிவமில்லாத நைவுப்புண்களில் தோன்றும். திசுக்களை சுற்றி மங்கலான பச்சை நிறத்தில் இருந்து ஆழ்ந்த பச்சை நிறத்தில் புள்ளிகள் தோன்றும்.
  • ஆரம்ப காலத்தில் முக்கோணத்தில் நைவுப்புண்கள் தோன்றும். பின் அது திசுக்களை சுற்றி ஒளி வட்டம் போல் திசுக்களின் மேல் லேசான நிறத்தில் காணப்படும். உட்பகுதிகளில் உள்ள நைவுப் புண்கள் கருப்பு நிறமாக மாறி வெளியே வரத் தொடங்கும்.
  • இந்த நோய் தாக்குதலினால் இலைகள் கிழிந்தும், துப்பாக்கி துளை போன்றும் தோற்றமளிக்கும். இலைகள் அதிகமாக தாக்கப்பட்டதால் நுண்ணுயிரி புள்ளிகள் மஞ்சள் நிறமாக மாறி இலைகள் உதிர்ந்துவிடும்.
  • இலைப்புள்ளிகள் இலையின் முனையில்  தான் முதலில் உருவாகும். பழத்தில் நோய் தாக்குதல், இலைத் தாக்குதலில் பொதுவானது அல்ல.
  • நோய் தாக்குதல் ஏற்பட்டால் சிறிய புள்ளிகள் உருவாகி பிசின் போன்று அந்தப் புள்ளிகளில் இருந்து கசிவு ஏற்படும்.
  • அதிகமாக எளிதில் பாதிக்கப்படுகின்ற மெத்திலி மற்றும் சான்ட்டா ரோசா வகைகள் பழங்களை சுலபமாக தாக்கப்படும், மோரிஸ், புரூஸ் அல்லது ஒசார்க் ப்ரீமியர் வகைகளை விட மேற்கூறிய வகைகள் எளிதில் தாக்கப்படும்.
  • அதிகப்படியான குளிர்காலங்களில் நுண்ணுயிரிகள் கொம்புகளை தாக்கும்.

கட்டுப்பாடு:

  • இரசாயனக் கட்டுப்பாடு பெரிதாக பயனளிக்காது. முன் மற்றும் இறுதி நிலையில் செயலற்று இருக்கும் பொழுது தாமிரத்தை தெளித்தால் நோயைக் கட்டுப்படுத்தலாம். நிலையான சத்துகள் முக்கியமானவை.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015