பயிர் பாதுகாப்பு :: முள்ளங்கி பயிரைத் தாக்கும் நோய்கள்

ஆல்டர்நேரியா கருகல்: ஆல்டானேரியா ராபானி

அறிகுறிகள்:

  • நோய்க் காரணி இலைகள், தண்டு, காய்கள் மற்றும் விதைகளைத் தாக்கும்.
  • முதலில் இலைகளில் சிறிய, மஞ்சள் நிற புள்ளிகள் சற்றே உயர்ந்த புள்ளிகள் தோன்றும்.
  • பின் தண்டுகள், விதைக் காய்களிலும் புள்ளிகள் தோன்றும்.
  • தாக்குதல் மழைக்காலத்தில் வேகமாக பரவும். முழுக்காயும் தாக்கப்படும். காய்கள் கருப்பு நிறமாகிஈ சுருங்கியும் காணப்படும்.
  • இந்தப் பூஞ்சான் காய்த்திசுக்களையும் துளைத்து, விதைகளையும் தாக்கும். தாக்கப்பட்ட விதைகள் முளைக்காமல் போய்விடும்.

கட்டுப்பாடு:

  • மான்கோசெப் 0.2% தெளிக்க வேண்டும்.

 



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015