பயிர் பாதுகாப்பு :: துவரை பயிரைத் தாக்கும் நோய்கள்

மஞ்சள் தேமல் நோய்: துவரை மஞ்சள் தேமல் நச்சுயிரி
அறிகுறிகள்

இந்நோயின் முதல் அறிகுறி, இளம் இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிறப் புள்ளிகள் காணப்படும். பின்னர் தோன்றும் இலைகளில் ஒழுங்கற்ற வடிவம் உள்ள மஞ்சளும், பச்சையும் கலந்த பகுதிகள் தோன்றும். சிலசமயம் நோயுற்ற இலைகள் சிறுத்து, சுருங்கியும் காணப்படும். நோயுற்ற செடிகளில் காய்களும், விதைகளும் மஞ்சளாக மாறிவிடும்.

பரவுதல்

வயலில் ஒரு செடியிலிருந்து மற்ற செடிகளுக்கு பெமீசியா டெபாசி என்கின்ற வெள்ளை ஈ யினால் பரவுகிறது.  களைச்செடிகள் மூலம் நச்சுயிரி எளிதாக பரவுகிறது.

மேலாண்மை

பாதிக்கப்பட்ட செடிகளை கலைந்து எடுத்தல், நோயின் அறிகுறி தென்பட்டவுடன் ஒரு ஹெக்டருக்கு மீத்தைல் டெம்ட்டான் 500 மில்லி, என்ற விகிதத்தில் தெளிக்க வேண்டும்.  பின்பு இருவாரம் கழித்து மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும்.



அறிகுறி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016