சாம்பல் நோய்: ச்பெரோதிக்கா பநோச்சா
அறிகுறிகள்
- இலைகள், தளிர்கள் மற்றும் மொட்டுகளில் சாம்பல் வெள்ளை தூள் போன்ற பொருள் காணப்படுவது இதன் அறிகுறியாகும்.
- பாதிக்கப்பட்ட இலைகள் சிதைந்துவிடும் மற்றும் சில இலைகள்் உதிர்ந்துவிடும
- பூ மொட்டுகள் திறக்கமால் போகலாம் அல்லது தரமற்ற மலர்கள் உருவாகலாம்.
- மிதமான வெப்பநிலை ( 70 முதல் 80 °F) மற்றும் ஈரப்பதம் உள்ள நாட்களில் வளரும் பருவநிலை இந்நோய் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படலாம்.
- நிழல் உள்ள மற்றும் குளிர்ந்த காலங்களில் இது கடுமையாக இருக்கும்.
 |
 |
 |
இலைகளில் சாம்பல் நோய் |
தண்டில் சாம்பல் நோய் |
மொட்டுகளில் சாம்பல் நோய் |
மேலாண்மை
- உதிர்ந்த இலைகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
- நனையும் கந்தகம் 0.3% அல்லது கார்பென்டிசம் 0.1% 2-3 தெளிப்புகள் 15 நாட்கள் இடைவெளியில் தெளிப்பது நோயைக் கட்டுப்படுத்தும்.
- 25 கிலோ / ஹெக்டருக்கு கந்தகத் தூள் தெளிக்கலாம்.
- அதிக வெப்பநிலையில் கந்தகம் உபயோகித்தால் தாவர நச்சு உண்டாகும்.
Image Source:
http://www.rose-gardening-made-easy.com/images/powdery-mildew-on-roses-21399873.jpg,
http://s4.gardenersworld.com/uploads/images/productimage/1226.jpg,
http://www.coltcreek.com/wp-content/uploads/2011/04/roses-014.jpg |