பயிர் பாதுகாப்பு :: குசும்பா பயிரைத் தாக்கும் நோய்கள்

இலைப்புள்ளி நோய் : செர்கோஸ்போரா கார்த்தாமி
அறிகுறிகள்:

  • பயிரிட்டு சில வாரங்கள் கழித்து (அ) பூக்கும் பருவத்தில் செடிகள் தாக்கப்படும்
  • வட்ட வடிவிலிருந்து ஒழுங்கற்ற வடிவில் பழுப்புநிற நீரில் அமிழ்ந்தது போன்ற புள்ளிகள், 3 - 10 மி.லி அளவில் இலைகளில் தோன்றும்
  • புள்ளிகளைச் சுற்றி மஞ்சள் நிற வளையம் காணப்படும்
  • இலைகளின் கீழ்ப்புறத்தில் அறிகுறிகள் முதலில் தோன்றும். பின் இலையின் மேற்புறம் வரை பரவும்
  • தண்டுகள் மற்றும் கணுக்களும் தாக்கப்படும்
  • தீவிரத் தாக்குதலின் போது, பூத் தட்டுகளில் சிவப்பு கலந்த பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்
  • பூ மொட்டுகளும் தாக்கப்பட்டு, பழுப்பு நிறமாக மாறி, பின் மடிந்துவிடும்

கட்டுப்பாடு:

  • நோய் தாக்கப்பட்ட செடிகளை அகற்றி, அழிக்க வேண்டும்
  • கோடை உழவு செய்ய வேண்டும்
  • தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ளப் பகுதிகளில் பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்
  • திரம் 3 கிராம் / கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • மான்கோசெப் 2.5 கிராம் (அ) கார்பண்டசிம் 1 கிராம் / லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024