சாம்பல் நோய் : எரிசிபே சிக்கோரேசியேரம்
அறிகுறிகள்:
- இலைகளின் மீது வெள்ளை நிற சாம்பல் போன்று காணப்படும்.
- பின் இலை முழுவதும் பரவும் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் காய்ந்து விடும்.
கட்டுப்பாடு:
- நோய் எதிர்ப்பு ரகங்களைப் பயிரிட வேண்டும்.
- வயலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- பரிந்துரைக்கப்பட்ட காலத்தில் விதைக்க வேண்டும்.
- முள்ளற்ற ஜீனோடைப்கள் நோய் தாக்கக் கூடியவை.
- நனையும் கந்தகம் 3 கிராம் / லி (அ) கார்பண்டசிம் 0.05% என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
|
|