பயிர் பாதுகாப்பு :: குசும்பா பயிரைத் தாக்கும் நோய்கள்

மஞ்சள் பசுஞ்சோகை நோய் : வெள்ளரி பசுஞ்சோகை நச்சுயிரி

அறிகுறிகள்:

  • இளம் இலைகளில் ஒழுங்கற்ற மஞ்சள் (அ) மங்கிய நிறமுள்ள திட்டுக்கள் மாற்றி மாற்றி காணப்படும்
  • இலைகள் காய்ந்து, உருமாறி, செடிகள் குட்டை வளர்ச்சியாக மாறும்
  • சில செடிகளில் முதலில் இலைகள் தோன்றும். இந்த கிளைகள் கொத்தாக, பசுஞ்சோகை பல்வண்ண நிறத்துடன் நடுவிலிருந்து அடுத்த வரிசையில் உள்ள இலைகளிலும் காணப்படும்
  • அசுவினி பூச்சிகளால் இந்த நோய் பரவும்

கட்டுப்பாடு:

  • நோய் தாக்கப்பட்ட செடிகள் அகற்றி, அழிக்க வேண்டும்
  • பாசனத்தை தள்ளிப் போடக்கூடாது
  • பூச்சிக் கொல்லிகளான மோனோகுரோட்டாபாஸ் 1.5 மி.லி (அ) டைமெத்தோயேட் 2 மி.லி அசுவினி பூச்சிகளைக் கட்டுப்படுத்த தெளிக்க வேண்டும்

 



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024