பயிர் பாதுகாப்பு :: குசும்பா பயிரைத் தாக்கும் நோய்கள்

துரு நோய்: பக்சினியா கார்த்தாமி

அறிகுறிகள்:

  • நோயின் தாக்கம் ஒரு பக்கமாகவே இருக்கும். பழுப்பு நிற புள்ளிகள் இலைகளில் தோன்றி நாற்றுக்கள் இறந்துவிடும்
  • முதிர்ச்சி அடைந்த செடிகளில் தண்டுகளில் வெட்டுப்பட்டு காணப்படும்
  • இலைப் பரப்பின் மீது 1-2 மி.மீ அளவில் சிறிய பொடி போன்று பழுப்புநிற புள்ளிகள் தோன்றி, பின் கருப்பு நிறமாக மாறும்
  • துரு நோயின் அறிகுறிகள் இலைகள், பூக்கள், பழங்கள் பழுப்பு நிறத்தில் தோன்றும்
  • விதை உருவாகும் சமயத்தில், ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி, பின் பழுப்பு நிறத்திலிருந்து கருப்பு நிறமாக மாறி, இலைகள் தொங்கி நாற்றுக்கள் கடைசியில் வாடும்
கட்டுப்பாடு:
  • தாழ்வான பகுதிகள், வெள்ளம் உள்ள இடங்களில் பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்
  • நோய் தாக்கப்பட்ட செடிகளை அகற்றி, அழிக்க வேண்டும்
  • நீர் பாய்ச்சுவதை காலம் தாழ்த்தக் கூடாது
  • பயிர்க் குப்பைகளை அழிக்க வேண்டும்
  • ஹெக்சகோனசோல் / ப்ரோப்பிகோனசோல் 1 மி.லி / லி (0.05%) (அ) மான்கோசெப் (0.25%) என்ற அளவில் 15 நாட்கள் இடைவெளியில் ஒன்று (அ) இரண்டு முறை தெளிக்க வேண்டும்
  • திரம் (அ) கேப்டான் 3 கி / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்


 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024