பயிர் பாதுகாப்பு :: குசும்பா பயிரைத் தாக்கும் நோய்கள்

வாடல் நோய்

அறிகுறிகள்:

  • மண் மேற்பரப்பில் முதலில் அறிகுறிகள் தோன்றி, பின் தண்டின் வாஸ்குலர் பகுதி வரை பரவும்
  • செடிகள் 6 – 10 இலை என்ற நிலையில் இருக்கும் போது அறிகுறிகள் தெளிவாகத் தோன்றும். இலைகள் மஞ்சளாதல், தொடர்ந்து வாடல், வாஸ்குலர் திசுக்கள் பழுப்பு நிற மடைதல்
  • விதை, மண், நோய் தாக்கப்பட்ட பயிர்க் குப்பைகளில் இந்த பூஞ்சான் உயிர் வாழும்
  • அமிலத் தன்மையுடைய மண்களில் அதிக தழைச்சத்து, வெப்ப வானிலை நிலவும் போது நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்

கட்டுப்பாடு:

  • பயிர் சழற்சி முறை.
  • நீரில்லாமல் இருத்தல் கூடாது.
  • சூடோமோனாஸ் ப்ளூரோசென்ஸ் உடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • டிரைக்கோடெர்மா ஹர்சினியானம் 2.5 கிலோ / ஹெக், டி.விரிடி மற்றும் டி.ஹர்சியானம் 10 கிராம் / கிலோ விதை என்ற அளவில் மண்ணில் கலந்து இடவேண்டும்
  • கார்பண்டசிமுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • கேப்டான் (அ) கார்பண்டசிம் 1 – 0.2%, 3 கிராம் (கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி.
  • பொட்டாஷ் (15கி / ஹெக்) பரிந்துரைக்கப்பட்ட அளவு இட வேண்டும்.

 



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024