பயிர் பாதுகாப்பு :: எள் பயிரைத் தாக்கும் நோய்கள் |
பாக்டீரியா இலைக்கருகல்: சேன்தோமோனஸ் கேம்ப்பஸ்டிரிஸ் வகை செசிமி
- செடியின் எல்லாப் பாகமும் பாதிக்கின்றன.
- சிறிய, ஒழுங்கற்ற வடிவமுள்ள புள்ளிகள் இலையில் தோன்றி, பின்னர் இவை பழுப்புநிறத்தில் மாறிவிடுகின்றன.
- இலைக் காய்ந்தும், பின்னர் உதிர்ந்துவிடுகின்றன.
அறிகுறிகள்
- செடியின் எல்லாப்பாகமும் பாதிக்கின்றன.
- சிறிய, ஒழுங்கற்ற வடிவமுள்ள புள்ளிகள் இலையில் தோன்றி, பின்னர் இவை பழுப்பு நிறத்தில் மாறிவிடுகின்றன.
- இலைக் காய்ந்தும், பின்னர் உதிர்ந்துவிடுகின்றன.
கட்டுப்பாடு
- பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ளவேண்டும்.
- நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்களான டி8யைப் பயிரிடலாம்.
- பருவகாலம் தொடங்கியவுடன் பயிர் செய்யவேண்டும்.
- முந்திய பயிரின் கழிவுகளை அழிக்க வேண்டும்.
- விதைகளை அக்ரிமைசின் - 100 (250 பிபிஎம்) அல்லது ஸ்ரெப்டோசைக்ளின் கரைசலில் (0.05 சதவிகிதம்) 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
- செடியின் மேல் ஸ்ரெப்டோசைக்ளின் (500 பிபிஎம்) தெளிக்கவேண்டும். தேவைப்பட்டால் 15 நாள் இடைவெளியில் தெளிக்கலாம்.
|
|
|