பயிர் பாதுகாப்பு :: எள் பயிரைத் தாக்கும் நோய்கள்

நாற்றழுகல் / வேரழுகல்: மேக்ரோபோமினா ஃபேசியோலினா

அறிகுறிகள்

  • இந்நோயைக் தாக்கக்கூடிய பூசணம் சிறிய நாற்றுக்களையும் அதன் தண்டினையும் மென்மையாக மாற்றி அதை கீழே விழுந்துவிடச்செய்து, பின்னர் இறந்துவிடச்செய்கிறது.
  • முதிர்ந்த நாற்றுக்களில், பழுப்பு மற்றும் கருப்பு நிறக்கருகல் தோன்றி பெரியதாசிப் பின்னர் தண்டினை பாதித்துச் செடியை இறந்துவிடச்செய்கின்றன.

கட்டுப்பாடு

  • வயலில் நன்றாக தண்ணீரை வடிகட்டவேண்டும்.
  • தாமாமாக பயிரிடவும்.
  • நோயுற்ற செடியை அழிக்கவேண்டும்.
  • விதையை திரம் + கார்பன்டாசிம் (0.05 சதவிகிதம்) என்ற அளவில் 1:1 என்ற விகிதத்தில் அல்லது 2 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.
  • நோய் வெளியில் தெரிந்தவுடன், கார்பன்டாசிம் 1 கிராம் / லிட்டர் என்ற அளவில் மண்ணில் தெளிக்கலாம்.
  • சூடோமோனஸ் ப்ளூரசன்ஸ் அல்லது  டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ / எக்டர் என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போடலாம்.

 

Sesame

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015