எள்ளின் பச்சைப்பூ நோய்: பைட்டோபிளாஸ்மா
அறிகுறிகள்
- செடியின் அனைத்து பூக்கும் பகுதிகளும் பச்சை இலைகளாக மாறுகின்றன. பூக்கும் பாகங்களில் நரம்புகளில் பச்சை நிறம் வெளிர்ந்து காணப்படும்.
- மிகவும் தீவரமாக பாதித்த பகுதிகளில் பூக்கள் முழுவதுமாக சிறுசிறு இலைகளாக அடர்ந்த நிலையில், சிறிய இடைக்கணுக்களைக் கொண்டு, நிறைய சிறிய கிளைகள் வளைந்து காணப்படும்.
- காய்கள் வளர்ந்தாலும் அதில் விதைகள் காணப்படாது.
- எள்ளின் பச்சைப்பூ நோய் ஒரோசியஸ் அல்பிங்கடஸ் என்னும் தத்துப்பூச்சியினால் பரவுகிறது.
கட்டுப்பாடு
- ஊடுபயிராக எள் + துவரை (6:1) என்ற விகிதத்தில் பயிரிடலாம்.
- நோயுற்ற செடிகளை அழிக்கவேண்டும்.
- மூன்று முறை டைமீதோயேட் (0.03 சதவிகிதம்) விதைத்த 30,40 மற்றும் 60வது நாட்களில் தெளித்தால் நோய் பரப்பும் காரணியைக் கட்டுப்படுத்தலாம்.
|
|