பயிர் பாதுகாப்பு :: எள் பயிரைத் தாக்கும் நோய்கள்

வேரழுகல் நோய் : ப்யூசேரியம் ஆக்ஸிஸிபோரம் வகை செசமி

அறிகுறிகள்

  • செடியின் எல்லா நிலைகளிலும் இந்நோய் வருகிறது.
  • கீழ்ப்பகுதியில் உள்ள இலைகள் அதிகம் பாதிக்கின்றன. பின்னர் இவை மேல்நோக்கி செல்கின்றன.
  • இலைகள் மஞ்சளாகவும், மடங்கியும், காய்ந்தும், காணப்படுகிறது.
  • மிகவும் தீவிரமான நிலையில் எல்லா இலைகளும், உதிர்ந்தும். காய்ந்தும் விடுகின்றன.
  • தண்டுப்பகுதியை பிளந்து பார்த்தால் பழுப்பு நிறம் தோற்றம் காணப்படும்.

கட்டுப்பாடு

  • கோடையில் ஆழமாக உழவேண்டும்.
  • பயிர் சுழற்சி முறையைக் கடைபிடிக்கவேண்டும்.
  • தொழு உரத்தை (12.5 டன் / எக்டர்) மண்ணுடன் கலந்து இடவேண்டும்.
  • நோயுற்ற செடிகளை எரித்து மண்ணில் புதைக்கவேண்டும்.
  • விதைகளை டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் / கிலோ அல்லது சூடோமேனாஸ் ப்ளூரசன்ஸ் 10 கிராம் / கிலோ அல்லது கார்பன்டாசிம் அல்லது திரம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி  செய்யலாம்.
  • கார்பன்டாசிம் 1 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.
  • டிரைக்கோடெர்மா விரிடி அல்லது சூடோமோகாஸ் ப்ளூரசன்ஸ் 2.5 கிலோ / எக்டர் என்ற அளில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்த மண்ணில் போடலாம்.

 

Sesame

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015