பயிர் பாதுகாப்பு :: எள் பயிரைத் தாக்கும் நோய்கள்
செர்கோஸ்போரா இலைப் புள்ளி / வெள்ளைப் புள்ளி நோய்: செர்கோஸ்போரா செசாமி, செ. செசாமிக் கோலா

அறிகுறிகள்:

  • இலைகளில் சிறிய, பழுப்பு நிற வடிவ 3 மிமீ விட்டமுடைய புள்ளிகள் சாம்பல் நிறத்தில் நடுவிலும், சுற்றியும் அடர் நிறத்திலும் காணப்படும்.
  • நோய் தீவிரமாகும் போது, இலைகள் உதிர்ந்து விடும்.
  • சாதகமான சூழ்நிலையின் போது, இலைக் காம்பு, தண்டு, விதைகள் வரை இந்தப் புள்ளிகள் பரவும்.

கட்டுப்பாடு:

  • நோய் தாங்கக் கூடிய / எதிர்ப்பு சக்தியுள்ள இரகங்களான TKG – 21 – ஐ பயிரிட வேண்டும்.
  • எள் + கம்புடன் (3:1) பயிர் சுழற்சி செய்ய வேண்டும்.
  • பயிர்க் குப்பைகளை அழிக்க வேண்டும்.
  • திரம் (அ) கார்பண்டசிம் 2 கி / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • மான்கோசெப் (0.25%) என்ற அளவில், நோய் தெரிய ஆரம்பத்தவுடனேயே 3 முறை, 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015