பயிர் பாதுகாப்பு :: சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள்
 
குருத்துப்பூச்சி: பெரிகிரினஸ் மெய்டிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • பயிரானது வளர்ச்சி குன்றி மஞ்சள் நிறத்தில் காணப்படும்தாக்கப்பட்ட இலைகள் நுனி முதல் அடிவரை சுருண்டுவிடுகிறது
  • குஞ்சுகள் தேன் கழிவு நீர் திரவத்தை இலைகளின் மேற்பரப்பில் சுரக்க செய்கிறது
  • சேதம் அதிகமாகும் போது பயிர்களில் கதிர் உருவாகுவதில்லை
  • அந்துப் பூச்சியானது இலையின் நடு நரம்பில் முட்டை இடுவதால் இலையின் நடு நரம்பு பாதிக்கப்பட்டு சிகப்பு நிறமாக மாறி இறுதியில் இலையானது வறண்டு விடும்.

பூச்சியின் விபரம்:

  • முட்டை: முட்டையானது இலையின் திசுக்கலில் இடப்பட்டு, வெள்ளை நிற மாவுப்பூச்சியால் மூடப்பட்டிருக்கும்
  • குருத்துப் பூச்சி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும், கண்ணாடி போன்ற இறகுகளைக் கொண்டிருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • டையசின் 0.04 சதம் (அ) டைமீத்தேயேட் 0.02 சதம் அல்லது பாஸ்போமிடான் 250 மிலி மருந்தை ஹெக்டருக்கு 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015