பயிர் பாதுகாப்பு :: சோளபயிரைத் தாக்கும் பூச்சிகள்
கதிர்நாவாய் பூச்சி: கலோகொரிஸ் அங்குஸ்ட்டேட்டஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் பால் பிடிக்கும் தருணத்தில் கதிரை தாக்கி சேதம் விளைவிக்கும்
  • தாக்கப்பட்ட கதிர்கள் மணி பிடிக்காமல் இருக்கும்
  • கதிரைத் தட்டினால் ஏராளமான குஞ்சுகளும் வளர்ந்த பூச்சியும் ஓடுவதைக் காணலாம்

பூச்சியின் விபரம்:

  • முட்டைகள்: உருண்டையாக, நீல நிறத்தில் இருக்கும்
  • குஞ்சுகள்: பச்சை நிறத்தில் இருக்கும்
  • நாவாய்பூச்சி: ஆண் நாவாய்பூச்சி பச்சை நிறத்திலும் தாய் பூச்சி பழுப்பு நிறத்திலும் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

பொருளாதார சேத நிலை: 10/கதிர்

  • கதிர் உருவாகிய 3 வது மற்றும் 18 நாட்கள் கழித்து கீழ்காணும் ஏதேனும் ஒர் மருந்தினைத் தெளிக்கவும்
    • கார்பரில் 10 D 25 கிலோ/ ஹெக்டேர் 
    • மாலத்தியான் 5 D 25 கிலோ/ஹெக்டேர் 
  • வேப்பங்கொட்டைச்சாறு 5 சதம ்பாசலோன்
  • மாலத்தையான் 50 EC 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015