பயிர் பாதுகாப்பு :: சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள்
நீளக்கரிப்பூட்டை : டோலிபோஸ்போரியம் எஃரன்பெர்கி
அறிகுறிகள்
  • கதிரின் சிறிய பகுதி மட்டும் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும்.
  • இப்பூசணத்தின் விதைப்பை உருளையாகவும், நீளமாகவும், தடித்த ப்ரெளவுன் நிறத்தினாலான நூலிழையினால் சிறிது வளைந்தும் காணப்படும்.
கட்டுப்பாடு
  • இந்நோயினால் பாதிக்கப்பட்ட கதிர்களை சேகரித்து துணியினுள் போட்டு வெண்ணீரில் முழ்கும்படி வைக்கவேண்டும்.
  • மறுதாம்புப் பயிர் செய்வதை தவிர்க்கவும்.
  • இந்நோயைத் தடுப்பதற்கு 1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பாக்சின் (விட்டாவேக்ஸ்) அல்லது 4 கிராம் திரம் என்ற அளவில் கலந்து விதைக்கவேண்டும்.
Sorghum

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015