பயிர் பாதுகாப்பு :: சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள்
அடிச்சாம்பல் நோய்: பெரனோஸ்கிளிரோஸ்போரா சொர்கை
அறிகுறிகள்
  • இலைகளின் அடிப்பாகத்தில் வெண்மையான பூசண வளர்ச்சி தோன்றுதல்
  • இலைகள் வெளுத்துக் காய்ந்து விடுதல்.
  • இலைகள் நரம்புகளின் ஊடே கிழிந்து நார் போல் தோன்றுதல்.

கட்டுப்பாடு

  • இந்நோயினால் பாதிக்கப்பட்ட பயிரை உடனே அகற்றவும்.
  • பயறு வகைப் பயிர் அல்லது எண்டிணய் வித்துப் பயிலை சுழற்சி முறையில் பயிரிடவும்.
  • ஒரு கிலோ விதைக்கு மெட்டாலக்சில் 6 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்தல். இதனைத் தொடர்ந்து மெட்டாலக்சில் 500 கிராம் அல்லது மெட்டாலக்சில் + மேன்கோசெப் 1 கிலோ / எக்டர் என்ற அளவில் தெளிக்கவும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015