பயிர் பாதுகாப்பு :: சோயாபீன் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
காய்த்துளைப்பான்: ஹெலிகோவெர்பா ஆர்மிஜீரா

தாக்குதலின் அறிகுறிகள்

  • இளம் புழு இலைகளின் பச்சையத்தை உண்டு சேதப்படுத்தும்.
  • வளர்ச்சியடைந்த புழு பூக்கள் மற்றும் காய்களைத் துளைத்து உட்சென்று சேதப்படுத்தும்.

பூச்சியின் அடையாளம்

  • முட்டைகள் - உருண்டை வடிவமுடையது. வெள்ளை நிறமாக இருக்கும்.
  • புழு - பச்சைக் கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். உடலின் மேற்பரப்பில் பழுப்பு நிறக்கோடும், வெள்ளை நிறக்கோடும் காணப்படும்.
  • கூட்டுப்புழு - பழுப்பு நிறத்தில் இருக்கும். இலைகள், காய்கள் மற்றும் மண்ணில் கூட்டுப்புழு காணப்படும்.
  • அந்துப்பூச்சி - அந்துப்பூச்சியின் பழுப்பு நிற முன் இறக்கையில் V - வடிவக்கோடு இருக்கும். பின் இறக்கையின் ஓரப்பகுதி பழுப்பு நிறத்திலிருக்கும்.
larva adult purpa
புழு கூட்டுப்புழு அந்துப்பூச்சி

 

கட்டுப்பாடு

  • கோடைக்காலங்களில் நிலத்தை ஆழமாக உழவேண்டும்.
  • சரியான பருவத்தில் விதை நடவு செய்ய வேண்டும்.
  • இனக்கவர்ச்சிப் பெரறியை 50 வீதம் அமைத்து ஆண் அந்துப்பூச்சியினைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • பறவை இருக்கையை எக்டர்க்கு 50 வீதம் அமைப்பதன் மூலம் அந்துப்பூச்சியின் புழுக்களை அழிக்கலாம்.
  • விளக்குப் பொறி அமைத்தல் (1/எக்டர்)
  • தாக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அகற்றுதல்.
  • எக்டர்க்கு 25 முதல் 30 கிலோ வரை குயினால்பாஸ் தூளை தூவி அந்துப்பூச்சியின் தாக்குதலைக் குறைக்கலாம்.
  • சேதம் அதிகமாகும் போது ப்ரப்னோபாஸ் 1 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015