| பயிர் பாதுகாப்பு  :: சோயாபீன் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
              
                |  புகையிலை  புழு: ஸ்போடாப்டிரா லிட்ரோ | 
               
              
                
                  
                    தாக்குதலின் அறிகுறிகள்
                      
                      
                        - இளம் புழு இலைகளின் பச்சையத்தை உண்டு  சேதப்படுத்தும்.
 
                        - தாக்கப்பட்ட இலைகளில் வெள்ளைக்கலந்த  மஞ்சள் நிறத்திட்டுகள் இருக்கும்.
 
                       
                      பூச்சியின் விபரம் 
                      
                        - முட்டைகள் குவியல்களாக பழுப்பு நிறத்தில்  இருக்கும்.
 
                        - புழு பச்சை நிறத்திலும், உடலின் மேற்பரப்பில்  கருமை நிறக்கோடுகளை கொண்டிருக்கும்.
 
                        - அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும்.  முன் இறக்கை பழுப்பு நிறமாகவும் வெள்ளை நிறக்கோடுகளைக் கெரண்டிருக்கும். பின் இறக்கை  வெள்ளை நிறமாகவும், ஒரங்களில் பழுப்பு நிறத்திட்டுகள் காணப்படும்.
 
                        | 
                      | 
                     
                  
                      | 
                     
                   
கட்டுப்பாடு 
                  
                    - கோடைக் காலத்தில் நிலத்தை ஆழமாக உழ  வேண்டும்.
 
                    - பரிந்துரை செய்யப்பட்ட விதை அளவை மட்டும்  பயன்படுத்த வேண்டும்.
 
                    - பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும்.
 
                    - தாக்கப்பட்ட பயிர்களை மற்றும் பயிர்  சேதங்களை சேகரித்தல் அகற்ற வேண்டும்.
 
                    - முட்டைக் குவியலையும், புழுவையும் சேகரித்து  அழிக்க வேண்டும்.
 
                    - பறவை இருக்கையை எக்டர்க்கு 10-12 வீதம்  அமைத்து புகையிலை புழுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
 
                    - வயல்வெளியை சுத்தமாக வைத்துக் கொள்ள  வேண்டும்.
 
                    - விளக்குப்பொறி அமைத்து அந்துப்பூச்சியினைக்  கவர்ந்து அழிக்கலாம்.
 
                    - இனக்கவர்ச்சி பெரறியை எக்டர்க்கு 5 வீதம்  அமைத்து ஆண் அந்துப்பூச்சியினை கவர்ந்து எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
 
                    - குயினால்பாஸ்  1000 மிலி மருந்தைத் தெளிக்கவும்.
 
                                        | 
                 
              | 
           
         
  |