பயிர் பாதுகாப்பு :: சோயாபீன் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
வெள்ளை ஈ: பெமிசியா டெபாசி |
தாக்குதலின் அறிகுறிகள்
- குஞ்சுகள், வளர்ந்த பூச்சியும் இலையின் அடிப்புறத்திலிருந்து இலையின் சாறை உறிஞ்சுகிறது.
- தாக்கப்பட்ட இலைகள் சுருண்டு மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
பூச்சியின் விபரம்
- வெள்ளை ஈ - சிறியது, மஞ்சள் நிறமுடையது, இறக்கைகள் வெண்மை நிறமாக இருக்கும்.
- குஞ்சுகளும், கூட்டுப்புழுவும் கருமை நிறமாக இருக்கும்.
|
|
கட்டுப்பாடு
- மாட்டு சாணத்தை களிமண்ணுடன் சேர்த்து தண்ணீருடன் கலந்து இலைகளின் மேல் தெளிக்க வேண்டும். இதனால் வெள்ளை ஈக்கள் மூச்சுத்திணறி இறக்கும்.
- குயினால்பாஸ், மாலத்தியான், டைமீதேயேட் இவற்றில் ஏதேனும் ஒன்றினைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
|
|
|