தண்டுத்துளைப்பான்: ஓபெரியா பிரிவிஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்
- தாக்கப்பட்ட தண்டுகளில் வளையம் காணப்படும்.
- புழு தண்டினுள் நுழைந்து உட்சென்று தின்று சேதப்படுத்தும்.
- தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் காய்ந்த விடும்.
- சேதம் அதிகமாகும் போது முழு செடியும் காய்ந்து மடிந்துவிடும்.
பூச்சியின் விபரம்
- புழு - வெள்ளையாகவும்,தலைப்பகுதி கருமையாகவும் இருக்கும்.
- தண்டுத்துளைப்பான் - மஞ்சள் நிறமாக இருக்கும். தலைபகுதி பழுப்பு நிறமாக இருக்கும்.
|
|
|
கட்டுப்பாடு
- கோடைக்காலத்தில் நிலத்தை ஆழமாக உழ வேண்டும்.
- பரிந்துரை செய்யப்பட்ட விதை அளவை பயன்படுத்த வேண்டும்.
- ஊடுபயிராக சோளம் மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிர்களை பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- பயிர்சுழற்சி முறையை கையாள வேண்டும்.
- தேவைக்கு அதிகமான நைட்ரஜன் உரங்களைத் தவிர்க்க வேண்டும்.
- தாக்கப்பட்ட பகுதிகளையும், முட்டைக்குவியலையும் சேகரித்து அழிக்க வேண்டும்.
- போரேட் 10 கிலோ அல்லது கார்போப்யூரான் 30 கிலோ தூளை விதைப்பின் போது தூவ வேண்டும்.
- குயினால்பாஸ் (அ) ட்ரைசோபாஸ் 12 மிலி மருந்தை 10 லிட்டர் தண்ணீருடன் கலந்துத் தெளிக்கவும்.
|