பயிர் பாதுகாப்பு :: சோயாபீன் பயிரைத் தாக்கும் நோய்கள்

ஆந்தராக்னோஸ் / காய் கருகல்: கொலிடோடிரைகம் டிரன்கேட்டம்

அறிகுறிகள்

  • பாதிக்கப்பட்ட விதைகள் சுருங்கியும், பழுப்பு நிறத்திலும் இருக்கும்.
  • விதையின் மேலுறை
  • இளம் பருவத்தில் ஒழுங்கற்ற பழுப்பு நிறத்தில் கோடுகள் இலை, காய், தண்டின் மேல் காணப்படும்.
  • அதிக ஈரப்பதம் இருக்கும் இடத்தில், இலையின் நரம்புகள் வெளிர் நிறத்திலும், இலைகள் சுருண்டும், தண்டுகளில் பிளவு ஏற்பட்டும் இலைகள் விரைவில் உதிரும் தன்மையும் கொண்டுள்ளது.
கட்டுப்பாடு
  • நல்ல, தரமான விதைகளை உபயோகிக்கவேண்டும்.
  • தானியப்பயிர்களுட்ன் பயிர் சுழற்சி செய்யவேண்டும்.
  • அறுவடை செய்தபின்பு வயலில் உள்ள கழிவுகளை அகற்றவேண்டும்.
  • நன்றாக தண்ணீரை வடிகட்டவேண்டும்.
  • விதையை திரம் அல்லது கேப்டான் அல்லது கார்பன்டாசிம் 3 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.
  • மேங்கோசெப் 2.5 கிராம் / லிட்டர் / கார்பன்டாசிம் / கிராம் /லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.

Soyabean


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015