பயிர் பாதுகாப்பு :: சோயாபீன் பயிரைத் தாக்கும் நோய்கள்

தவளைக் கண்சோய்: செர்கோஸ்போரா ஜோஸ்னா
அறிகுறிகள்:

  • இளம் சாம்பல முதல் சுடர் சாம்பல் நிற புள்ளிகள் தோன்றி விதைகளிலும காணப்படுகிறது
  • இலைப்பரப்பை தாக்கும். ஆனால் தண்டுகள், காய்கள், விதைகளையும் தாக்கும்
  • வட்டவடிவில், பழுப்பு நிறப்புள்ளிகள் ஆரம்பத்தில் தோன்றி, பின் சாம்பல் நிறத்தில், அடர் நிற விளிம்புகளுடன் காணப்படும்
  • இலைப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய புள்ளிகளாக மாறும்
  • புள்ளிகள் அதிகமாகும் போது, இலைகள் வாடி, முதிர்வதற்கு முன்பே தொங்கும்
  • காய்களில் உள்ள புள்ளிகள் வட்ட வடிவில், நீளமாக, சிறிதே அமிழ்ந்து, சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும்

கட்டுப்பாடு:

  • ஆரோக்கியமான (அ) சான்றளிக்கப்பட்ட விதைகளைப் பயன்படுத்த வேண்டும்
  • தானியங்களுடன் பயிர் சுழற்சி செய்யவேண்டும்
  • பயிர்க் குப்பைகளை அறுவடை செய்தபின் முழுவதுமாக அகற்ற வேண்டும்
  • தரம் + கார்பண்டசிம் (2:1) 3 கிராம் / கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்
  • மான்கோசெப் 2.5 கிராம்/ லிட்டர் (அ) கார்பண்டசிம் 1 கிராம்/ லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015