பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
பஞ்சு அசுவினி: செரட்டோவாகுனா லேனிஜீரா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- இலைகளின் அடியில் கூட்டம் கூட்டமாக குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் சாற்றை உறிஞ்சி வாழும்
- தாக்கப்பட்ட இலைகளில் வெள்ளை நிற துாள்கள் படிந்திருக்கும். இவை சோகையின் நிறத்தினை ஓரங்களில் மஞ்சளாக மாறி காய்ந்து போகும்.
- பின்பு இலைகள் உடைந்து முழுவதுமாக காய்ந்துவிடும்
- பூச்சிகள் இலைப் பரப்பில் தேன் போன்ற திரவத்தினை சுரக்கச் செய்வதால் கரும்பூசணப் படலம் காணப்படும். எனவே இலைகள் எரும்பினால் கவரப்பட்டு கருமையாக மாறிவிடுகின்றது.
- வெள்ளை நிறத் துகள்கள் நிலம்/மண் மீதும் கொட்டிக் காணப்படும்
பூச்சியின் விபரம்:
- இளம் குஞ்சு: இளம் குஞ்சின் முன்றாம் மற்றும் நன்காம் வளர் பருவத்தில் அதன் உடல் முழுவதும் பஞ்சு போன்ற ஒரு அமைப்பு கணப்படும்.
- அசுவினி: வளர்ந்த பூச்சியானது இறக்கைகள் இன்றி உடல் முழுவதும் பஞ்சால் முடப்பட்டிருக்கும்.
- சேரட்டொவேகனா லேனிஜெரா: வெளிர் பச்சை நிறத்தில் காணப்படும்.
- செரட்டோவேகனா கேரம்மினியம்: வெளிர் மஞ்சள் நிறத்திலும் மற்றும் முதிர்ந்த நிலையில் கருப்பு நிறத்தில் காணப்படும்.
|
|
கட்டுப்பாடு:
- இயற்கை எதிரிகளான டைபா ஏபிடோவோரா, மைக்ரோமஸ், காக்ஸினெலிட்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி பஞ்சு அசுவினியின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்
- தாக்குதலுக்கு உள்ளான சோகைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
- விதை பயன்பாட்டிற்கு, தாக்கப்பட்ட விதைக்கரணைகளைத் தவிர்க்க வேண்டும்
- பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட சோகைகளை கால்நடைகளுக்கு தீவணமாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும்
- பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்:
- அசிப்பேட் 75 SP @ 2 கி/லி
- குளோரோனபரிபாஸ் 25 EC @ 2 மி.லி/லி
|
|
|