பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் நோய்கள்
“பொக்கோ போயிங்” : கரும்பு நோய்
  • தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கரும்பு பயிரானது அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
  • தற்பொழுது நிலவும் தட்பவெப்ப மற்றும் உயிரியல் காரணிகளால் கரும்பில் “பொக்கோ போயிங்” என்ற நோயின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
  • பொக்கோ போயிங் என்பது ஒழுங்கற்ற வடிவம் (அ) சிதைந்த மேற்பகுதியைக் குறிக்கும் ஒரு “ஜாவானிய” சொல்லாகும்.
  • பொக்கோ போயிங் நோயானது ஃபுசேரியம் வகை பூசணங்களால் உருவாகிறது.
  • சாறு உறிஞ்சும் பூச்சியான “குருத்து மாவுப்பூச்சி” யின் தாக்குதல் இந்நோயினை தீவிரப்படுத்துகிறது.
  • ஏப்ரல் – ஜூலை மாதங்களில் குருத்து மாவுப்பூச்சியின் தாக்குதல் காணப்படுவதால் “பொக்கோ போயிங்” நோய் தாக்குதலின் தீவிரமும் அதிகரிக்கிறது.
  • குருத்து மாவுப்பூச்சியினைத் தொடர்ந்து எறும்புகளின் நடமாட்டமும் தென்படுகிறது.
  • குருத்து மாவுப்பூச்சியிலிருந்து வெளியிடப்படும் தேன் போன்ற திரவமானது கரும்படல நோய் உருவாகக் காரணமாகிறது.
  • மூன்று முதல் ஏழு மாத வயதுடைய நடவுப்பயிர்களில் இந்நோயின் தாக்குதல் தென்படும் ஆனால் மறுதாம்பு பயிரில் இந்நோய் ஒரு மாதத்திலிருந்து தென்பட ஆரம்பிக்கின்றது.
அறிகுறிகள்
  • வெளிரிய இளம் இலைகள்
    (இளம் இலைகளானது வெளிரி, சுருங்கி, திருகி வளர்ச்சி குன்றி காணப்படுதல்)
  • குருத்தழுகல்
    (குருத்துப் பகுதியானது பழுப்பு நிறமாகி, அழுகி இறுதியில் அழிந்து விடுதல்)
  • தண்டில் கத்திவெட்டு அமைப்பு
    தண்டில் உள்ள திசுவினை கூர்மையான கத்தியால் வெட்டியது போன்று தோற்றமளித்தல்
  • இடைக்கணுக்கள் சிறுத்தல்
    கணுவிடைப்பகுதி குறுகி சிறுத்து கரும்பு பயிரானது குட்டையாக காட்சியளிக்கும்
  • விதைப்பரு முளைத்தல்
    கரும்பு பயிரானது முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே விதைப்பருவானது முளைத்து விடுகின்றன
   
  வெளிரிய இளம் இலைகள் இளம் இலைகளானது சுருங்கி, திருகி வளர்ச்சி குன்றி காணப்படுதல் மறுதாம்பு - இளம் இலைகளானது திருகி காணப்படுதல் குருத்தழுகல்  
   
  தண்டில் கத்திவெட்டு அமைப்பு இடைக்கணுக்கள் சிறுத்து மற்றும் விதைப்பரு முளைத்தல் குருத்து மாவுப்பூச்சி உடன் எறும்புகளின் நடமாட்டம் கரும்படல நோய்  
நோய்க்காரணி:
  • ஃபுசேரியம் வகை பூசணங்கள் – ஃபுசேரியம் சக்காரி, ஃபுசேரியம் ப்ராலிபெரேட்டம், ஃபுசேரியம் வெர்ட்டிசில்லியாய்டஸ்.

சாதகமான தட்பவெப்ப சூழ்நிலை:

  • வெப்பம் மிகுந்த, ஈரமான காலநிலை மற்றும் “மேகமூட்டத்துடன் கூடிய கோடை மழை” ஆகிய சாதகமான சூழ்நிலைகள் இந்நோய் உருவாவதற்கு மிக முக்கியமானவையாக இருக்கின்றன.

நோய்பரவும் விதம்:

    காற்றின் மூலம் பரவக்கூடிய நோய்
    முதல்நிலை பரவுதல் : காற்று
    இரண்டாம் நிலை பரவுதல் : பாதிக்கப்பட்ட கரணை, மழைத்துளி, மண் மற்றும் நீர்பாசனம்
  • நோய்க்காரணிகள் வாழும் விதம்்:

    • இயல்பான சூழ்நிலைகளில் இந்நோய்க்காரணியானது தாவரக்கழிவுகளில் 12 மாதங்கள் வரை வாழக்கூடியது.

    மேலாண்மை முறைகள்:

      கீழ்க்காணும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை பின்பற்றி பொக்கோ போயிங் நோயினைக் கட்டுப்படுத்தலாம்.
    உழவியல் முறைகள்
    மிதமான நோய் தாங்கி வளரக்கூடிய இரகத்தினை பயன்படுத்தவும்
    :
    Co 86032
    மிகவும் பாதிப்புக்குள்ளாகக் கூடிய இரகங்களை பயிரிடுவதை தவிர்க்க வேண்டும்
    :
    CoV 09356, CoV 94101, Co 11015, Co 06022 and 87 A 298



    இயற்பியல் முறைகள்:

    • பூசண மற்றும் பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதற்கு முன்பு தோகையை உரித்திருக்க வேண்டும்.
    • எறும்புகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து குருத்து மாவுப்பூச்சியின் தாக்குதலை உறுதிசெய்ய வேண்டும்.
    • குருத்தழுகல் மற்றும் தண்டில் கத்திவெட்டு அமைப்பு ஆகிய அறிகுறிகள் தென்படுகின்ற கரும்பு பயிர்களை முற்றிலும் அகற்ற வேண்டும்.

    இரசாயன முறைகள்:

    • நடவு செய்வதற்கு முன் விதைக் கரணைகளை 0.1% புரப்பிகோனோசோல் (Propiconazole) 25%EC (1மிலி/லிட்டர்) + இமிடாகுளோபிரிட் (Imidacloprid) 70ws (1மிலி / லிட்டர்) திரவத்தில் 20 நிமிடங்கள் நனைத்து கரணை நேர்த்தி செய்வதன் மூலம் முன்கூட்டியே இந்த நோய் பரவுவதைத் தவிர்க்கலாம்.
    • ஒவ்வொரு நடவு / மறுதாம்பின் போதும் மற்றும் மண் அணைக்கும் போதும் பரிந்துரைக்கப்பட்ட பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை கரும்பு பயிர்களுக்கு அளிக்க வேண்டும்.
    • பயிர் ஊட்டச்சத்து குறைபாடுள்ள கரும்புப்பயிர்களை நோய்க்காரணிகள் எளிதில் தாக்கி சேதத்தை உண்டுபண்ணுவதைத் தவிர்க்க கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக் கழகம் பரிந்துரைத்துள்ள TNAU கரும்பு பூஸ்டரை மறுதாம்பு / கரும்பு நடவு செய்த 45, 60 மற்றும் 75 நாட்களில் ஒரு ஏக்கருக்கு 1, 1.5 மற்றும் 2 கிலோ முறையே தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கவும்.
    • நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் புரப்பிகோனாசோல் (Propiconazole) 25% EC (1மிலி / 1லிட்டர்) + இமிடாகுளோபிரிட் 17.8 SL (0.4மிலி / 1லிட்டர்) ஆகிய இரசாயன பூச்சிக்கொல்லிகளை தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து இலை வழியாகத் தெளிக்கவும். மீண்டும் அறிகுறிகள் தென்பட்டால், புரப்பிகோனாசோல் (Propiconazole) 25% EC (1மிலி / லிட்டர்) + ஃபுலோனிகாமிடு (Flonicamid) 50WG (0.3கி/லிட்டர்) (அ) குளோதியானிடின் (Clothianidin) 50% WDG (0.5கி/லிட்டர்) ஆகியவற்றை தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து 20 நாட்கள் இடைவெளியில் இலை வழியாகத் தெளிக்கவும்.
  • உள்ளடக்க சரிபார்ப்புகள்: 
    டாக்டர்.எஸ். தங்கேஸ்வரி,
    உதவி பேராசிரியர் (பயிர் நோயியல்),
    பயிர் நோயியல் துறை,
    TANU, கோயம்புத்தூர்

    முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
    © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024