பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் நோய்கள் |
கரிப்பூட்டை நோய்: உஸ்டிலாகோ ஸைட்டாமினியா
அறிகுறிகள்:
- வளரும் கரும்பின் வளர்ச்சிப் பகுதியிலிருந்து இச்சாட்டை வடிவம் (25 முதல் 150 செ.மீ) வரை காணப்படும்.
- கருமை நிற பூஞ்சாணத் துகள்களைக் கொண்ட, ஒளி ஊடுருவக் கூடிய வெள்ளி போன்ற சவ்வினால் இச்சாட்டை சூழப்பட்டுள்ளது.
- கணுவிடைப்பகுதி நீண்டு ஆரம்பத்தில் தடிமன் குறைய ஆரம்பிக்கும். பின்பு கரும்பின் நீளமும் குன்றிவிடும்.
- கட்டைக் கரும்பில் (மறுதாம்புப் பயிரில்) பக்க மொட்டுகள் அபரிமிதமாக முளைவிட ஆரம்பிகும். அதன் இலைகள் குறுகலான செங்குத்தான தோகைகளாக உருவாகும்.
|
|
|
|
|
|
|
|
இச்சாட்டை வடிவம இலை |
|
சிறிய மற்றும் குறுகிய இலைகள் |
|
கருமை நிற பூஞ்சாண |
|
நோய்க்காரணி:
- இப்பூசண இலை ஸ்போர்கள் வட்ட வடிவில், வெளிர்பழுப்பு நிறமும், 6.5-8.5 மைக்ரான் விட்ட அளவும் கொண்டவை.
- நீரில் எளிதில் முளைக்கக் கூடிய இவை, 2-3 செல்கள் உடைய முன்பூசண இலைகளை (புரோ மைசீலியா) உற்பத்தி செய்கின்றன.
- மெல்லிய சுவர் கொண்ட, நிறமற்ற, ஒரு செல் கொண்ட, உருண்டை நீள் வட்ட முதல் நீண்ட வடிவம் கொண்ட பூசண வித்துக்கள் பக்கங்களில் அல்லது நுனிப்பகுதியில் தோன்றுகின்றன.
கட்டுப்படுத்தும் முறை:
உழவியல் முறைகள்:
- மிதமான மற்றும் நன்கு எதிர்ப்புத் திறன் கொண்ட கோ.சி 22, கோ 86249, கோ.ஜி 93076, கோ.எஸ்.ஐ.6 மற்றும் கோ.ஜி 5 போன்ற இரகங்களைப் பயிரிடவேண்டும்.
- 10 சதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட வயல்களில் மறுதாம்புப் பயிர் விடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- துவரை பயிரை கரும்பு வரிசைகளுக்கிடையே பயிடுவதால் இப்பூஞ்சாணங்களின் இரண்டாம் நிலைப் பரவல் குறைக்கப்படுகின்றது.
|
|
|
|
|
உஸ்டிலாகோ ஸைட்டானிமியா |
|
|
இயற்பியல் முறைகள்:
- விதைக் கரணைகளை காற்றேற்றப்பட்டநீராவி முறை (AST) மூலம் 50° செ. முதல் 1 மணி நேரம் அல்லது சுடுநீரில் 50 செ அரை மணி நேரம் அல்லது 52° செ 18 நிமிடங்களுக்கு பதப்படுத்தி நேர்த்தி செய்தல் வேண்டும்.
- கரிப்பூட்டை நோய் தாக்கிய துாரை சாட்டையிலிருந்து பூசண வித்துக்கள் காற்றில் பறக்காமல் இருக்கும்படி ஒரு கோணி அல்லது பாலித்தீன் பை கொண்டு நுழைத்து, கரிச்சாட்டையை மட்டும் ஒடித்துப் பின் இத்துாரையும் பெயர்த்து யாவற்றையும் சேர்த்து எரித்து விட வேண்டும்.
இரசாயன முறைகள்:
- டிரையடிமெஃபான் 1 கி/ 1 லி நீரில் கலந்தது அல்லது கார்பென்டஸிம் 1கி/1லி நீரில் கலந்தது. இதில் ஏதேனும் ஒரு மருந்தினைக் கொண்டு கரணை நேர்த்தி செய்தல் வேண்டும்.
- கைத்தெளிப்பான் கொண்டு 10% ரவுண்டப் கரைசலை பாதிக்கப்பட்ட பகுதிகளின்மீது தெளிக்கவும்.
- நோய் முற்றிய நேரத்தில் கிளைப்போயேட் (360 ஜி/எல்) மருந்தினை 5-7 லி/ஹெ என்ற அளவில் தெளிக்கவும்.
|
Content validators:
Dr. T. Ramasubramanian, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007.
Dr.V. Jayakumar, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007.
Dr.M. Ravi, Assistant Professor, Sugarcane Research Station, Sirugamani, Trichy- 639115.
|
|
|