பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் நோய்கள்
செவ்வழுகல் நோய்: குலோமெரெல்லா டுகுமெனன்சிஸ்
அறிகுறிகள்:
  • இந்நோய் தாக்கப்பட்ட கரும்பின், 3 அல்லது 4வது இலைகள் முதலில் ஆரஞ்சு நிறம் கலந்த மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.  பின் சோகைகள் கீழிருந்து மேலாகக் காய ஆரம்பிக்கும். 
  • பூசண வித்துக்கள் இலையின் உள்ளே சென்று, நடுநரம்பில் அடர்சிவப்பு நிறப்புள்ளிகளைக் காணலாம். பின்பு இலைகளிளும் தேன்றும்.
  • வெளிப்புற அறிகுறிகள், நோய் தாக்கப்பட்ட 16-21 நாட்களுக்குப் பிறகே தெரிய வரும்.
  • கரும்பைப் பிளந்து பார்த்தால் உட்பகுதியில் சிவப்பு நிறக் கோடுகளைக் காணலாம்.இவற்றிற்கு குறுக்காக வெண்மை நிறப் பகுதிகளையும் காணலாம்.
  • கரும்பு மேல் அழுக்கடைந்த பழுப்பு நிறத்திட்டுகள் காணப்படும்.  சில சமயங்களில் கரும்பின் உட்பகுதியில் உள்ள திசுக்கள் அழுகி கரும்பழுப்பு நிற திரவம் வழியும்.  இதிலிருந்து சாராய நெடி வீசுவதிலிருந்து, இந்நோயினை உறுதி செய்து கொள்ளலாம்.
     
  மஞ்சள் புள்ளிகள்   சிவப்பு பழுப்பு புள்ளிகள்   துரு போன்று
தோற்றம்
நோய்க்காரணி:
  • இந்நோய் குலோமெரெல்லா டுகுமெனன்சிஸ் எனும் பூஞ்சை மூலம் பரவுகிறது.  இதன் பழைய பெயர் கோலிடோடிரைகம் பால்கேட்டம் என்பதாகும்.
  • இலைத்தாள், இலைப்பரப்பு பகுதிகளில் காணப்படும் பூஞ்சை தனியாகவோ அல்லது குழுவாகவோ வாஸ்குலார் கற்றைகளுக்கிடையே வரிகளைத் தோற்றுவித்தப்படி இருக்கும்.  இலை அடர் பழுப்பு நிறத்தில் மூழ்கியவாறு 65-250 மைக்ரான் மீ விட்ட அளவும், 8 செல்கள் அளவு தடித்த சுவரும் கொண்டிருக்கும், ஆஸ்டியோல் சற்று வெளி அமைந்தபடி வட்டவடிவமாக இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:
உழவியல் முறைகள்:

  • செவ்வழுகல் நோயினைத் தவிர்க்க, நோயற்ற பகுதிகளில் ஆரோக்கியமான விதைக் கரணைகளை நடவேண்டும்.
  • நோய் கண்ட வயல் வழியாக நீர்ப்பாய்ச்சுவதைத் தடுக்க வேண்டும்.  நோய் தோன்றிய  அதே நிலத்தில் கரும்பைத் தொடர்ந்து பயிரிடுவதைத் தவிர்த்து நெல் போன்ற மாற்றுப் பயிர்களைப் பயிரிட வேண்டும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியுடைய கோ 86249, கோ 85019, கோ.கு 93076, கோ.சி 95071, கோ.க 98061, கோ.க 99061 மற்றும் கோ.க 22 இரகங்களைப் பயிரிடுதல் வேண்டும்.
   
  பக்ஸீனியா இரியான்த்தி  

இயற்பியல் முறைகள்:

  • செவ்வழுகல் நோயினைத் தவிர்க்க, நோயற்ற பகுதிகளில் ஆரோக்கியமான விதைக் கரணைகளை நடவேண்டும்.
  • நோய் கண்ட வயல் வழியாக நீர்ப்பாய்ச்சுவதைத் தடுக்க வேண்டும்.  நோய் தோன்றிய  அதே நிலத்தில் கரும்பைத் தொடர்ந்து பயிரிடுவதைத் தவிர்த்து நெல் போன்ற மாற்றுப் பயிர்களைப் பயிரிட வேண்டும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியுடைய கோ 86249, கோ 85019, கோ.கு 93076, கோ.சி 95071, கோ.க 98061, கோ.க 99061 மற்றும் கோ.க 22 இரகங்களைப் பயிரிடுதல் வேண்டும்.

இயற்பியல் முறைகள்:

  • தூர் அகற்றிய இடத்திலும் அதைச்சுற்றியுள்ள இடங்களிலும் கார்பன்டசிம் 50 டபிள்யூ.பி பூசனக்கொல்லி மருந்தை (ஒரு லிட்டரில் நீரில் ஒரு கிராம்) என கலந்து ஊற்ற வேண்டும்.
  • 1% போர்டியாக்ஸ் கலவை அல்லது பிற பூஞ்சானக் கொல்லி கரைசலில் விதைக் கரணை முழுவதும் நனையுமாறு நனைத்து எடுத்துப் பின் நடலாம்.
  • வயலில் இந்நோய் பாதிப்பு தென்பட்டால் உடனே பாதிக்கட்ட இலைகளைச் சேகரித்து அழிக்க வேண்டும்.

வேதியியல் முறைகள்:

  • கரணைகளை நேர்த்தி செய்து பின் நடுதல் வேண்டும்.  இதற்கு எக்டருக்கு 125 கிராம் கார்பன்டாசிம் 50 டபிள்யூ.பி அல்லது 1 கிராம் கார்பன்டாசிம் , பூசணக் கொல்லி மருந்தை 2.5 கிலோ யூரியாவுடன் சேர்த்து 250 லிட்டர் தண்ணீரில் கலந்து கரணைகளை ஐந்து நிமிடம் நனைத்து நடுதல் வேண்டும்.
  • பெவிஸ்டின், பெனோமைல், டாப்ஸின் மற்றும் அரிட்டான் ஏதேனும் 1% பூஞ்சாணக் கொல்லி மருந்தினை 52  செ வெப்பநிலையில் 18 நிமிடங்கள் விதைக்கரணை நேர்த்தி செய்யலாம்.  இதனால் இக்கிருமிகள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன.
Content validators: 
Dr. T. Ramasubramanian, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007.
Dr.V. Jayakumar, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007. 
Dr.M. Ravi, Assistant Professor, Sugarcane Research Station, Sirugamani, Trichy- 639115.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015