அடிச்சாம்பல் நோய் : பிளாஸ்மோபேரா ஹால்ஸ்டிடி
அறிகுறிகள்
- இந்நோய் அதிகமாக விதையின் மூலம் பரவுகிறது.
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடிகள் அழுகியும், இலைகளில் பழுப்பு நிறக்கோடுகளும், வேர்களில் அல்லது தண்டுகளில் முடிச்சுகள் காணப்படும்.
- முதல் நிலை அறிகுறியாக மேல் இரண்டு இலைகள் மஞ்சள் நிறமாக மாறியிருக்கும்.
- தீவிரமாக நோய் தாக்கப்பட்ட செடிகளில் வளர்ச்சி குன்றியும், இலைகள் முழுவதும் வெளிர் பச்சை நிறத்துடன் காணப்படும்.
- தண்டுகள் ஒடியும் தன்மையுடையதாகவும், இலைகள் திருகிய தோற்றத்துடனும், மஞ்சள் மற்றும் பச்சை நிறம் இலைகளில் மாறி மாறி காணப்படும்.
- இலைகளின் அடியில் பூசண வளர்ச்சி காணப்படும்.
கட்டுப்பாடு
- விதையை மெட்டலாக்சில் 3 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யவேண்டும்.
- நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளை அழித்தல் அகற்றுதல்
|
|