ரைசோபஸ் தலை கருகல்: ரைசோபஸ் ஸ்பிசிஸ்
அறிகுறிகள்
- பழுப்புநிற புள்ளிகள் சூரியகாந்தியின் தலைப்பகுதிக்கு பின் காணப்படும்.
- இப்புள்ளிகள் பெரியதாகி, வெண்மையான பூசணவித்துக்களால் சூழப்பட்டிருக்கும்.
- அழுகிப்போன தலைப்பாகம் உதிரத் தொடங்கும்.
- பூப்பதற்கு முன் தலைப்பகுதியில் காயம் ஏற்படும்.
- மிகவும் மென்மையான விதை உருவாகும் நிலையில் அதிகம் அழுகும் நிலை ஏற்படும்.
- பூசணத்தால் பாதிக்கும் நிலையைப் பொறுத்து மகசூல் நிர்ணயிக்கப்படும்.
கட்டுப்பாடு
- பூக்கும் பருவம் முடியும் முன், பூச்சிக்கொல்லி மற்றும் பூசணக்கொல்லியை தெளிக்கவேண்டும்.
- முடிந்தவரை தலைப்பகுதியில் காயம் ஏற்படாதவாறு பாதுகாக்கவேண்டும்.
- மேங்கோசெப் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
|

|