தேயிலை கொசுப்பூச்சி: ஹீலோபைல்டிஸ் தீவோரா
சேதத்தின் அறிகுறிகள்:
- பூச்சிகள் இளங்குருத்து, இளம் இலைகள் மற்றும் இளம் தளிர்களின் சாறுகளை உறிஞ்சி சேதப்படுத்தும்
- சாறுகளை உறிஞ்சும் பொழுது பூச்சிகள் நச்சு உமிழ் நீரை உடசெலுத்தும்
- சேதப்பட்ட பகுதிகளில் கரும்புள்ளிகள் தென்படும்
- தாக்கப்பட்ட இலைகள் மேல்நோக்கி சுருங்கியிருக்கும்
- தாக்குதலுக்கு உள்ளான பகுதியின் தோல் கடினத் தன்மையடைந்த பழுப்புநிறத்திட்டாக மாறிவிடும் கருகி வாடி விடும்
பூச்சியின் விபரம்:
- நன்கு வளர்ந்த பூச்சியானது சிகப்பு நிறத்துடன் கருப்புநிறத்தலை மற்றும் சிகப்பு நிற மார்புப் பகுதியுடன் காணப்படும். பசுமைக் கலந்த பழுப்பு நிற இறக்கையுடன் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- குலோதியோநிடின் 50 WDG 120 கிராம்/எக்டர் அல்லது தையக்லோப்ரிட் 21.7 SC 375 கிராம்/எக்டர் அல்லது தையமீத்தாக்சோன் 25 WG 100 கிராம்/எக்டர் அல்லது பைபெந்திரின் 8 SC 500 கிராம்/எக்டர்
|
|