பயிர் பாதுகாப்பு :: தேயிலை/டீ பயிரைத் தாக்கும் நோய்கள்

கொப்புளம் கருகல்: எக்சோபெசிடியம் வேகக்சன்ஸ்

சேதத்தின் அறிகுறி:

  • முதலில் சிறு, குண்டூசி துளை அளவு புள்ளிகள்  ஒரு மாதத்திற்கும் குறைவான இளம் இலைகளில்  காணப்படும்.
  • இலைகள் மேலும் வளரும் பொழுது,  புள்ளிகள் வெளிப்படையாக, பெரிய, வெளிர் பழுப்பு ஆக மாறிவிடும்.
  • சுமார் 7 நாட்களுக்கு பிறகு, இலையின்  கீழே  கொப்புளங்கள் கரும் பச்சை நிறத்தில், தண்ணீர் நனைத்த வலையங்களை போன்ற அறிகுறிகளை உருவாக்குகிறது.
  • பூஞ்சை வித்துகள் வெளியாவதைத் தொடர்ந்து, கொப்புளம் வெள்ளை மற்றும் மிருதுவாக ஆகிறது.
  • அதனைத் தொடர்ந்து கொப்புளம் பழுப்பாக மாறும் மற்றும் பாதிக்கப்பட்ட இளம் தண்டுகள் வளைந்து, முறிந்து  சிதைந்துவிடும்.

வாழ்க்கை சுழற்சி

  • நோய் சுழற்சி சாதகமான (ஈரமான) நிலையில் தொடர்கிறது மற்றும் காற்று மூலம் பூஞ்சை உடனடியாக பிரிகிறது.
  • இலையில் இருக்கும் பூஞ்சை வித்திகள் போதுமான ஈர பதத்தில்  முளைத்து , பாதிப்பை ஏற்படுத்தி , 10 நாட்களுக்குள் அறிகுறிகளை ஏற்படுத்தும்.
  • பூஞ்சை நேரடியாக இலை திசுக்களில்  ஊடுருவ முடியும்.
  • பெசிடியோச்போறேஸ் வறட்சி அல்லது பிரகாசமான சூரிய ஒளி நிலைகளில் உயிர் வாழ்வது குறைவு.
  • பூஞ்சை வாழ்க்கை சுழற்சி 3-4 வாரங்கள் ஆகும்.

 


கொப்புளம் கருகல்
கட்டுப்பாட்டு
  • பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் தளிர்களை கவாத்து மூலம்  நீக்கி அழிக்கவும்.
  • போரடியாக்ஸ் கலவையை அல்லது 0.1 % காப்பர் ஆக்சி குளோரைடு தெளிக்கவும்.
  • ஒரு ஹெக்டருக்கு 210 கி காப்பர் ஆக்சி குளோரைடை, 210 கி நிக்கல் குளோரைடு உடன் கலந்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை ஜூன்- செப்டம்பர் காலம் வரை  மற்றும் அக்டோபர்- நவம்பர் காலம் வரை தெளிக்கவும்.
  • ஒரு ஹெக்டருக்கு டிரைடிமார்ப் 340 மற்றும் 560 மில்லி லேசான மற்றும் மிதமான மழை காலங்களில் தெளிக்கவும்.

Content validator: Dr. M. Deivamani, Assistant Professor, Horticulture Research Station, Yercaud-636602.

Image source:

Keith, l., Ko, W.H and Sato D.M. 2006. Identification Guide for Diseases of Tea (Camellia sinensis). Plant Disease, 33, pp-1-4.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015