பயிர் பாதுகாப்பு :: மஞ்சள் மற்றும் இஞ்சி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
தண்டுத் துளைப்பான் : கோனோகீத்தீஸ் (டைக்கோகுரோசிஸ்) பங்டிஃபெராலிஸ்
சேதத்தின் அறிகுறிகள்:
  • தாக்கப்பட்ட போலித் தண்டுகளின் இலைகள் மஞ்சளாக மாறி காய்ந்துவிடுகின்றன.
  • புழுக்கள் போலித்தண்டுகளை குடைந்து தாக்கி கழிவுப் பொருட்களை வெளித்தள்ளியிருக்கும். மையக் குருத்து இலைகள் வாடியும், மஞ்சளாக மாறி இருக்கும்.

பூச்சியின் விபரம்:

  • முட்டை: இளஞ்சிவப்பு, தட்டையான நீள்வட்ட வடிவில் தனியாகவோ அல்லது குவியலாகவோ இளம் தளிர்களின் மீது இடும்.
  • புழு: இளஞ்சிவப்பு உடலையும், தலை மற்றும் முன் மார்புக்கவசப் பகுதியும் பழுப்பு நிறத்திலும், உடலில் சிறு மெல்லிய உரோமங்களையும் கொண்டிருக்கும்.
  • கூட்டுப்புழு: பட்டுக்கூட்டில் தண்டில் உள்ள இலைகளில் இருக்கும்.
  • பூச்சி: அந்துப்பூச்சி சிறியதாக இருக்கும்.
  • மஞ்சள் நிற இறக்கையில் கருப்பு புள்ளிகளுடன் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • மாலத்தியான் 0.1 சதவிகிதம் 30 நாட்கள் இடைவெளியில் ஜீலையிலிருந்து அக்டோபர் வரை தெளிக்கவேண்டும்.
புழு பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015