பயிர் பாதுகாப்பு :: தர்பூசணி வகைப் பயிரைத் தாக்கும் நோய்கள்

நீர் வடியும் தண்டுக் கருகல் நோய் :

அறிகுறிகள்:

  • தண்டுகளில் நீரில் உரைய புள்ளிகள் முதல்ல தோன்றும். பின் அவை காய்ந்து, துரு போல் மாறும்.
  • வயதான தண்டுகளில் சிறிய, கருப்பு நிற புள்ளிகள் தோன்றும்.
  • பெரிய புள்ளிகளால் தண்டுகள் பிரிந்து, வறண்ட நிலையின் போது வாடும்.
  • தண்டுகளில் உள்ள புள்ளிகளில் சிவப்பு கலந்த பழுப்பு நிற திரவம் வடியும்.

கட்டுப்பாடு:

  • நோயற்ற விதை மற்றும் நாற்றுக்களைப் பயன்படுத்த வேண்டும்.
  • மேன்கோசெப் 0.2% விட்டு விட்டுத் தெளிக்க வேண்டும்.
  • பயிர் சுழற்சி செய்ய வேண்டும்.



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015