பயிர் பாதுகாப்பு :: தர்பூசணி வகைப் பயிரைத் தாக்கும் நோய்கள்

அடிச்சாம்பல் நோய்

அறிகுறிகள்:

  • வெள்ளரிகள், ஸ்குவாஷ், பூசணிகளில் நோய் தோன்றும்,
  • சிறிய, மஞ்சளற்றப் புள்ளிகள் இலையின் மேற்புறத்தில் தோன்றும், பின் அடர்ந்த மஞ்சள் நிறம் தோன்றி, நடுவில் பழுப்பு நிறமாகக் காணப்படும்
  • இந்த புள்ளிகள் கோண வடிவில் இருக்கும். இலைகள் ஈரமாக இருக்கும் பொழுது, வெள்ளை கலந்த சாம்பல் நிற நீல பூஞ்சாண் வளர்ச்சி புள்ளிகளின் அடியில் காணப்படும்
  • தர்பூசணியின் மீது, மஞ்சள் நிறப் புள்ளிகள் கோண வடிவில் தோன்றி, பின் பழுப்பு (அ) கருப்பு நிறப் புள்ளிகள் தோன்றும்
  • இலையின் கீழ்ப்புறத்தில் வித்துக்கள் தோன்றம். இவை காற்றின் மூலம் பரவும். மழை, ஈரப்பதம் வானிலையின்போது இந்த நோய் பரவும்.

கட்டுப்பாடு:

  • மெட்டாலாக்ஸில் 500 கிராம் (அ) மெட்டாலாக்ஸில் + மேன்கோசெப் 1 கிலோ/ஹெக்டேர் (அ) மேன்கோசெப் 1 கிலோ /1ஹெக் தெளிக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015