இயற்கை சீற்ற மேலாண்மை் :: சுற்றுச்சூழல் மாசுபடுதல் 

உயிரியல் பல் வகைமை 
வரையறை
உயிரியல் பல்வகைமை என்பது சூழலியல் முறைகள் மரபணுக்கள் அல்லது புவியின் அனைத்து பகுதிகள் போன்ற வேறுபட்ட சூழ்நிலை முறைகளில் வாழுகின்ற உயிரினங்களாகும். உயிரியல் பல்வகையை உயிரியல் முறையின் நிலையை அளவீட உதவுகிறது. இன்றைய சூழ்நிலையில் மில்லியன் பல்வகை உயிரியனங்கள் புவியில் உள்ளது. அதாவது கிட்டதட்ட 3.5 பில்லியன் வருடங்களின் மதிப்பீட்டு படி உயிரினங்கள் உள்ளது. 
பல்லுயிர் பெருக்கம் என்னது உயிரியியல் அமைப்பின் படி வேறுபட்ட வாரிக்கை சூழ்நிலை முறைகளை கொண்ட உயிரினங்களாகும்.

பவளப் பாறை பல்வகைமை


உயிரியியலறிஞர்களின் படி பல்லுயிர் பெருக்கம் (அ) உயிரியல் பல்வகைமை என்பது. “மொத்த மரபணுக்கள் வகைகள் மற்றும் சூழியியல் முறைகள் போன்றவையாகும். மேலும் இது பெரும்பாலான சந்தர்பங்களை விளக்குகிறது. அத்துடன் மூன்ஞ நிலைகளை இனங்காணுகிறது.

  • மரபியற் பெருக்கம் / பல்வகைமை
  • இனப் பெருக்கம் / பல்வகைமை
  • சூழ்நிலை மண்டல பெருக்கம்

மரபியற் பெருக்கம்
மரபியற் பெருக்கம் (அ) பல்வகைமை என்பது ஒரே இனத்தைச் சார்ந்த பல வேறுபாடான உயிரினங்கள் இருக்கும் நிலையாகும். இது மரபியியல் மாற்றத்தில் இருந்து வேறுபட்டதாகும்.

வேளாண்மை தொடர்பு
மனிதர்கள், பண்ணை (விளைநிலம்) யை தொடங்குவதற்கு முன் அவர்கள் விளைச்சலை பெருக்கக்கூடிய பயிர்களை தேர்வு செய்கின்றனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவை ஒரு பயிர் சாகுபடி மற்றும் மரபியல் ஒற்றுமையுடைய பயிர்கள் போன்றவற்றை வழிவகுக்கிறது குறைந்தபட்ச அல்லது மரபியற் பெருக்கமற்ற பயிர்கள் எளிதில் தாக்கக்கூடிய நோய்களினால் எளிதில் தாக்கப்படுகிறது. இந்த பயிர்களின் நோய்கள் நுண்ணுயிர்களால் ஏற்பட்டு இருப்பின் பயிர் இனத்தை முற்றிலுமாக தாக்கி அழித்துவிடுகின்றது. நுண்ணுயிர்களால் எளிதில் தாக்கப்படும் மரபியற் பெருக்கத்தை மனிதர்கள் விளைச்சலுக்காக தேர்ந்தெடுக்கும் போது பயிர்கள் முற்றிலுமாக நுண்ணுயிர் நோய்களால் தாக்கபட்டு அழிக்கப்படுகிறது.
அயர்லாந்தில் அபகீர்த்தியுள்ள உருளைக்கிழங்கு பஞ்சம் இதற்கு ஒரு சம்பவமாகும். புதிய உருளைக்கிழங்குகள் இனப்பெருக்கத்தால் உற்பத்தி செய்ய முடியாது. ஆனால் சில நேரங்களில் பெற்றோரின் பகுதியிலிருந்து உருவாக்கப்படுகின்றது மற்றும் ஒரு உருளைக்கிழங்கின் நகலில் இருந்து அனைத்து பயிர்கள் உருவாக்கப்படுவதால் அனைத்தும் எளிதில் தாக்கக்கூடிய நோய்களுக்கு ஏற்றதாக அமைகிறது. 1840 ல் அயர்லாந்து மக்கள் உணவுக்காக உருளைக்கிழங்கை பொருத்தே இருந்தனர். உருளைக்கிழங்கின் ஒரு வகை ரகமான “லம்பர்” ரகத்தை பயிரிட்டனர் இந்த ரகம் எலியால் தாக்கக்கூடிய அதாவது பைடோப்தோரா இன்ஃபென்டன்ஸ் (phytophthora infestans) என்ற நோய்க்கு ஏற்றதாக இருந்தது. இதனால் பெரும்பாலான உருளைக்கிழங்கு அழிந்து பத்தாயிரம் மக்கள் உணவில்லாமல் மடிந்தனர்.

மரபியற் பல்வகைமையின் தேக்கத்தை சமாளி
உலகமானது பல்வேறு வழிகளில் மரபியற் பல்வகைமையை பாதுகாப்பது அல்லது அதிகரிப்பது போன்றவற்றை கையாளுகிறது. பெருங்கடலின் மிதப்பிகள். கடலின் வைரஸ்கள் மிதப்பிகளை தாக்கி மற்ற உயிரினங்களின் மரபணுக்களை எடுத்துக்கொள்கிறது. ஒரு செல்லின் மரபணுவை கொண்ட வைரஸ் ஆனது மற்றவை தாக்கி மரபியற் பண்பாட்டை பிறகு மாற்றுகிறது மிதப்புகள் இருந்த பகுதியின் தொகையை பாதுகாப்பது மற்றும் கற்பனை செய்ய முடியாத சுற்றுப்புறச்சூழலின் மாற்றம் போன்றவற்றை பராமரிக்க உதவுகிறது. 
பயமுறுத்தும் இனங்களில் சிறுத்தைபுலியும் ஒன்றாகும். இதன் மரபியற் பல்வகைமை மிகக்குறைவாகும். எனவே இனப்பெருக்கத்தின் குறைவான விந்தணு உள்ளது. 5 சதவிகித சிறுத்தைபுலிகள் உயிருடன் இருக்கிறது. பத்தாயிரம் வடங்களுக்கு முன்னரே சிறுத்தைப்புலியின் ஒரு இனமான ஜீபேட்டஸ் அழிந்து விட்டது. சிறுத்தை இனமானது அதன் இனப்பெருக்கத்தில் வளர்ச்சி தடை இருப்பதால் இவைகள் அவைகளின் இனத்திற்கு உள்இனப்பெருக்கம் செய்கின்றது.

மரபியல் பல்வகைமையின் அளவீடு: 
மரபியல் பல்வகைமையின் எண்ணிக்கையானது சில எளிமையான அளவீடுகள் மூலம் மதிப்பீடப்படுகிறது.

  • மரபணு பல்வகைமை என்னும் மரபகராதியின் பல்லுருவாக்கத்திற்கு இடையேயுள்ள சரிசிகிதமாகும்
  • வேறுபட்ட காரணிகள்
  • அல்லீல்கள்

இனப் பல்வகைமை
இனப் பல்வகைமை என்பது பகுதியிலுள்ள இனத்தின் எண்ணிக்கை மற்றும் அதன் தொடர்புடைய வளம் போன்றவற்றின் பொருளடக்கமாகும். இந்த இனப் பல்வகைமை பல்வேறு வகைகளில் உதவுகிறது.
இந்த இனப் பல்வகைமையின் பொதுவான பொருடக்கம் “சிம்சன்ஸ் டைவர்சிட்டி இன்டெக்ஸ்” ஆகும்.
(எ.கா)
D = (n/N)2  
n - என்பது குறிப்பிட்ட இனத்தின் மொத்த உயிரினங்கள்
N - என்பது அனைத்து இனத்தின் மொத்த உயிரினங்கள்
D - என்பது பல்வகைமையின் பதிப்பு. இதன் மதிப்பு 0 மற்றும் 1 க்கு இடையே வேறுபடும். 1 ஆக இருந்தால் சூழ்நிலை மண்டலத்தில் மிக அதிக திறனை கொண்டதாக இருக்கும்.

இனப்பல்லகைமையினால் சிறிய வளைவு மனிதர்களிடம் இருக்கும். இதற்கு முக்கிய காரணங்கள் பின்வருமாறு

  • இருப்பிடமானது அழிந்து விடுதல் மாற்றம் அடைதல் அல்லது துண்டு துண்டாகுதல்
  • வெளிநாட்டு இனத்தின் அறிமுகம்
  • மிகையான அறுவடை
  • உலக வானிலை மாற்றம்

சூழ்நிலை மண்டல பெருக்கம் / பல்வகைமை
சூழ்நிலை மண்டலத்தின் நிலையை பொருத்து பகுதியில் ஏற்படும் பல்வகைமையாகும். இது உயிரியல் பல்வகைமையிலிருந்து வேறுபட்டதாகும்.

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015