|
ஆக்டினோ மைக்கோசிஸ்
நோயின் தன்மை |
|
- இது நுண்ணுயிரியால் ஏற்படக்கூடக்கூடிய கறவைமாடுகளைத் தாக்கும் நோயாகும்.
- இந்நோயினால் தாக்கப்பட்ட மாடுகளின் கீழ்த்தாடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் வீங்கி காணப்படும்.
- இந்நோயின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாடுகள் தீவனம் எடுப்பது பாதிக்கப்படுகிறது.
|
|
|
நோய்க்கான காரணங்கள் |
|
- ஆக்டினோமைசிஸ் நோய் ஆக்டினோமைசிஸ் போவிஸ் எனும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது.
- இது தவிர கொரினிபேக்டீரியம் பையோஜீனஸ் மற்றும் ஸ்டெபைலோகாக்கஸ் எனும் நுண்ணுயிரிகளும் இந்நோயினை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கின்றன.
|
நோய் பரவும் விதம் |
|
- இந்நோய் பொதுவாக 2-5 வயதான மாடுகளை அதிகம் பாதிக்கிறது. இந்நோயின் தாக்கம் பொதுவாக குறைவாகவே காணப்படுகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கு இந்நோய் பரவுவது மிகவும் குறைவு.
- சாதாரணமாக இந்நோய்க்கிருமி மாடுகளின் உடலில் இருக்கும். ஆனால் ஏதேனும் காயம், புண்கள் ஏற்படும் போது இந்நோய்க் கிருமி மாடுகளின் உடலில் சென்று நோயினை உண்டாக்குகிறது.
- குத்தும் தன்மையுடைய தீவனங்களால் மாடுகளின் வாயில் புண்கள் ஏற்பட்டு நோய் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது.
- மாடுகளில் பல் முளைக்கும் போது அதன் வழியாக இந்நோய்க்கிருமி உட்சென்று நோயினை ஏற்படுத்தும்.
- சாதாரணமாக,, நோயினால் பாதிக்கப்படாத மாடுகளின் குடலில் ஆக்டினோமைசிஸ் போவிஸ் கிருமி இருக்கும். ஆனால் மாடுகளின் குடலிலோ அல்லது சீரண மண்டலத்திலோ புண்கள் ஏற்படும் போது இந் நோய்க்கிருமிகள் அதன் வழியாக உட்சென்று இதர திசுக்களை ஊடுருவி நோயினை ஏற்படுத்துகிறது.
|
|
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் தாடையில் முதலில் வலியற்ற கெட்டியான வீக்கம் ஏற்படும்.
- பிறகு இந்த வீக்கம் பெரியதாகி, அருகிலிருக்கும் எலும்புப் பகுதிகளைத் தாக்கி, அதில் ஓட்டை ஏற்படுத்தும்.
- பாதிக்கப்பட்ட மாடுகளின் தாடைகள் முழுவதும் பாதிக்கப்படுவதால், மாடுகள் அசைபோடுவது தடுக்கப்பட்டு சீரணமும் பாதிக்கப்படுகிறது. இதனால் மாடுகளின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
- தாடைப் பகுதியில் ஏற்படும் சீழ்க்கட்டிகள் உடைந்து தோல் வழியாக சீழ் வடியும்.
- பாதிக்கப்பட்ட மாடுகளின் வாயினைப் பரிசோதிக்கும்போது பற்கள் இல்லாமல் இருக்கும் அல்லது பல் ஆடிக்கொண்டிருக்கும்.
- பாதிக்கப்பட்ட மாடுகளின் வாயில் துர்நாற்றம் அடிக்கும்.
- இவ்வாறு ஆடிக்கொண்டிருக்கும் பல்லால் மாடுகளின் வாயில் உமிழ்நீர் சுரப்பது அதிகமாகி, தீவனத்தினை விழுங்குவதும் பாதிக்கப்படுகிறது.
- நாள்பட்ட நோய் தாக்குதலில், மாடுகளின் இதர எலும்புகளும் நோயினால் பாதிக்கப்படுகின்றன.
- ஆனால் இந்நோயினால் தாடைக்கருகிலுள்ள நிணநீர் கட்டிகள் பாதிக்கப்படுவதில்லை. அதனால் நிணநீர் மூலம் இந்நோய் பரவுவதில்லை.
|
|
|
|
கட்டுப்படுத்தும் முறைகள் |
|
- இந்நோய்க்கெதிராக தடுப்பூசி எதுவும் இல்லை.
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளை பண்ணையிலுள்ள இதர மாடுகளிடமிருந்து தனியாக பிரித்து பராமரிக்க வேண்டும்.
- இந்நோய்க்கிருமிகளால் அசுத்தமடைந்த பொருட்களை உபயோகப்படுத்தாமல் அப்புறப்படுத்தவேண்டும். மேலும் நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
- தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரைக் கொண்டு பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும்.
|
|
|
|
|