|
மனிதர்களின் வாழ்வில் கால்நடைகளின் பங்கு ...
- மனிதர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களான பால், இறைச்சி, மற்றும் இதர மதிப்புக்கூட்டிய பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்வதால் மனிதர்களின் வறுமையினைப் போக்கி உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கும் வழி வகை செய்கின்றன.
- விவசாயத்திற்குத் தேவையான விலை மதிப்பு மிக்க இயற்கை உரத்தினை கால்நடைகள் அளிப்பதன் மூலம் மண் வளத்தை அதிகரித்து விவசாய உற்பத்தியினை அதிகரிப்பதில் கால்நடைகள் பெரும்பங்கு வகிக்கின்றன.
- பல்வேறு விதமான விவசாய வேலைகளுக்கு கால்நடைகள் உபயோகப்படுத்தப்படுக்கின்றன. தவிரவும் விவசாயப் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச்செல்லவும் கால்நடைகள் பயன்படுத்தப்படுவதால் எரிபொருளும் சேமிக்கப்படுகிறது.
- உயிரியல் மற்றும் பொருளாதார நிலைப்பாட்டினை கால்நடைகள் ஏற்படுத்துவதால் சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதிலும் கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- தோல் பொருட்கள் உற்பத்திக்குத் தேவையான தோல் மற்றும் உரோமங்கள் கால்நடைகளிடமிருந்து பெறப்படுவதால் உபரி வருமானத்திற்கும், அன்னியச்செலவாணியினை அதிகரிப்பதிலும் கால்நடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
- கால்நடைகளிலிருந்து பெறப்படும் உப பொருட்களான கொம்புகள், குளம்புகள் போன்றவை ஊரகப்பகுதிகளில் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
- உரோமம் மற்றும் இதர இயற்கை நார்களை உற்பத்தி செய்து அதன் மூலம் வருமானம் பெற கால்நடைகள் பயன்படுகின்றன.
- கால்நடைகளை இறைச்சிக்காக பயன்படுத்தும் போது கிடைக்கும் அவற்றின் இரத்தம், மனிதர்களுக்கு பயன்படும் மருந்துகள் மற்றும் இரத்த உற்பத்தியினைத் தூண்டும் டானிக்குகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன.
- கால்நடை வளர்ப்பு ஊரகப் பகுதியில் வாழும் மக்களுக்கு சுய வேலைவாய்ப்பு அளிப்பதுடன், ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கிறது.
- மக்களின் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பணத்தினை சேமிக்கவும் கால்நடை வளர்ப்பு பெரும்பங்காற்றுகிறது.
- நிலத்தில் வளரும் களைகளை கால்நடைகள் தீவனமாக உட்கொள்வதால், நிலங்களை களையற்று சுத்தமாக வைக்கவும் கால்நடைகள் பயன்படுகின்றன.
- மொத்தமாக கால்நடை வளர்ப்பு சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை ஏற்படுத்தும் ஊக்கியாக செயல்படுகிறது.
|
|
|