|
இடுக்குவான் குந்து எனப்படும் மூன்று நாள் காய்ச்சல்
|
நோய்க்கான காரணம் |
|
- இடுக்குவான் குந்து எனப்படும் நோய் பசு மற்றும் எருமை மாடுகளைத் தாக்கக்கூடிய வைரஸால் ஏற்படும் நோயாகும்.
- ஆறு மாதம் முதல் இரண்டு வயதுடைய மாடுகள் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.இந்நோய் ஏற்படுத்தும் வைரஸ் ரேப்டோவைரஸ் குடும்பத்தைச் சார்ந்தது.
|
நோய் பரவும் முறை |
|
- சேண்ட் ஃபிளை எனும் பறக்கும்பூச்சிகள் வழியாக இந்த நோய் பரவுகிறது.
- குயூலெக்ஸ்,குயூலிகாய்டஸ் ரகத்தினைச் சேர்ந்த கொசுக்கள் மூலமாகவும் இந்த நோய் பரவுகிறது.
- கால்நடைகளின் நேரடித் தொடர்பு மூலமாகவோ அல்லது கால்நடைகளின் எச்சில்,சளி மூலமோ இந்நோய் பரவுவதில்லை.
- காற்றின் மூலமாக இந்த நோய் ஏற்படுத்தும் வைரஸ் விரைவில் பரவுகிறது. ஐந்து மாத கால இடைவெளியில் இந்த வைரஸ் 3000 மைல்கள் பரவியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
- நோய் ஏற்படுத்தும் வைரஸ் மாடுகளின் உடலுக்குள் சென்ற 5ம் நாள் மாடுகளின் இரத்தத்தில் இருக்கும்.கொசுக்கள் மற்றும் இதர பூச்சிகள் மாடுகளைக் கடிப்பதன் மூலம் இந்நோயைப் பரப்புகின்றன. நோயின் தாக்குதலுக்குள்ளாகும் கால்நடைகளில் 0.002 மிலி இரத்தம் நோயினை உண்டாக்கப் போதுமானது.
- நோயினால் பாதிக்கப்பட்டு, நலமடைந்த கால்நடைகளில் இந்த வைரஸ் இருக்காது. ஆனால் சில விலங்குகள் இந்நோயினை ஒரு பருவநிலைக் காலத்திலிருந்து மற்றொரு பருவ நிலைக்கு பரப்புகின்றன என்ற கருத்தும் நிலவுகிறது.
- பாதிக்கப்பட்ட மாடுகளின் இரத்தத்தை மற்ற மாடுகளுக்குச் செலுத்துவதால் இந்நோய் பரவும்.
|
|
|
|
நோயின் அறிகுறிகள் |
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் உடல் வெப்பநிலை மிகவும் அதிகரிக்கும்.
- உடல் மற்றும் தசைகளில் நடுக்கம்.
- பாதிக்கப்பட்ட மாடுகள் நடக்க மிகவும் சிரமப்படுதல்.வலுக்கட்டாயமாக மாடுகளை நடக்க வைக்கும்போது மிகவும் சிரமப்பட்டு வளைந்த முதுகுடன் நடத்தல்.
- மாடுகளில் தீவனம் எடுப்பது மிகவும் குறைதல் மேலும் பால் உற்பத்தியும் கணிசமாகக் குறைதல்
- வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு, மூக்கில் சளி வடிதல், கண்ணில் நீர் வடிதல்.
- பாதிக்கப்பட்ட மாடுகளின் தசைகள் கடினமாக, விரைப்பாக இருப்பதுடன், வலியும் காணப்படுதல்
- பாதிக்கப்பட்ட மாடுகள் நொண்டிக்கொண்டு நடத்தல்.
- மிகவும் பாதிக்கப்பட்ட மாடுகள் பின்னங்கால்கள் விரைப்புடன் கீழே படுத்துக்கொள்ளுதல்.
- நோய் அறிகுறிகள் வெளிப்பட்ட சில மணி நேரங்களில் கால்கள் பாதிக்கப்பட்டு மாடுகள் நொண்டிக்கொண்டிருத்தல்.
- நோயினால் பாதிக்கப்பட்டு படுத்திருக்கும் மாடுகளில் அசைபோடுதல் பாதிக்கப்பட்டு வலியால் முனகிக்கொண்டும், பற்களைக் கடித்துக்கொண்டும் இருத்தல்.
|
|
|
நோயினைக் கட்டுப்படுத்துதல் |
|
- நோயினைப் பரப்பும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதே நோயினைக் கட்டுப்படுத்தும் முதல் நடவடிக்கையாகும்.
- தற்போது இந்நோயினைத் தடுப்பதற்கு எந்தவொரு தடுப்பூசியும் இல்லை.
|
|
|
|